கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தேனீ மற்றும் பூச்சிகளையும் கொல்லும் பட்டாடி என அழைக்கப்படும் ஆப்ரிக்கன் துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

 

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு வனப்பகுதிகளுக்குள், பட்டாடி என அழைக்கப்படும் ஆப்ரிக்கன் துலிப் மலர்கள் பூத்துக் குலுங்கத் துவங்கியுள்ளன, கடந்த ஆகஸ்ட் முதல் பூக்கத்துவங்கிய இந்த மலர்கள் தற்பொழுது மரம் முழுவதும் சிகப்பு வண்ணத்தில் பூத்துக் குலுங்குகின்றன.

 

image

இயற்கையாகவே இந்த மலர்களின் அமைப்பு, அதன் மீது தேன் சேகரிக்க வரும் தேனீக்களை கொல்லும் தன்மையுள்ளதாகவும், இதனால் இந்த மரங்கள் மலைப்பகுதிகளுக்கு உகந்த மரங்கள் அல்ல என்றும் பழங்குடிகள் கூறுகின்றனர்.

 

image

அலங்காரத்திற்காக ஆங்கிலேயர்களால் நடவு செய்யப்பட்ட இந்த மரங்கள் இயற்கை சமநிலையை கெடுக்கும் தன்மை வாய்ந்தது எனவும், தமிழக வனத்துறை இதுபோன்ற மண்வளம், சுற்றுச்சூழலை கெடுக்கும் தன்மை கொண்ட மரங்களை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.