வழக்கமாக பேட்ஸ்மேன்கள் தான் கிரிக்கெட்டில் பந்தை பேட் மூலம் அடித்து சிக்சருக்கு பறக்க விடுவார்கள். ஆனால் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பேட்ஸ்மேனை க்ளீன் போல்டாக்கி அந்த பந்தையே சிக்சருக்கு பறக்க விட்டவர். அதை 2019 உலக கோப்பை தொடரில் அவர் நிகழ்த்திக்காட்டியவர்.

image

நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக டாட் பால்களை வீசியவரும் ஆர்ச்சர் தான். 

டி20 ஸ்பெஷலிஸ்ட் பவுலரான ஆர்ச்சர் கிரிக்கெட்டின் தாய்நாடான இங்கிலாந்து அணியின் பிரதான பவுலர்களில் ஒருவரானது எப்படி?

ஜோஃப்ரா ஆர்ச்சர் யார்?

கடந்த 1995இல் ஏப்ரல் 1 அன்று மேற்கிந்திய தீவுகளில் உள்ள  பார்படோஸில் பிறந்தவர். அவரது அப்பா பிராங்க் ஆர்ச்சர் இங்கிலாந்தை சேர்ந்தவர். அம்மா ஜூலி வைத்தே பார்படோஸை சேர்ந்தவர்.

image

கிரிக்கெட் மீது சிறு வயது முதலே தீவிர ஆர்வம் கொண்ட ஆர்ச்சர் சர்வமும் கிரிக்கெட் மயமாகவே கொண்டிருந்தார். அதனால் உள்ளூர் கிரிக்கெட்டில் கில்லியாக வலம் வந்தார்.  தொழில்முறை சார்ந்த கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியதன் மூலம் பதின் பருவத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் அண்டர் 19 அணியில் இடம்பெற்று ஆர்ச்சர் விளையாடியும் உள்ளார். 

2014 வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய ஆர்ச்சர் 2015இல் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய ஆர்ச்சருக்கு இங்கிலாந்து அணியின் இடம்பிடிக்க வேண்டுமென்ற விருப்பமும் இருந்தது. அதற்கு அவரது பிரிட்டிஷ் குடியுரிமையும் கைகொடுத்தது. இருப்பினும் ஆர்ச்சர் 18 வயதை கடந்திருந்ததால் ஏழு ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்கியிருந்தால் தான் அணியில் இடம்பிடிக்க முடியும் என்ற இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் விதிமுறைகள் தடையாக இருந்தது. 

image

ஆர்ச்சரும் தளராமல் உள்ளூர் கிரிக்கெட்டிலும், சர்வதேச டி20 லீக் ஆட்டங்களிலும் விளையாடினார். 

ஐசிசி விதிமுறைகளுக்கு ஏற்ப இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு 2018இல் சில தளர்வுகளை கொண்டு வந்தது. அதன் மூலம் இங்கிலாந்து அணியில் இடம் பெற்ற ஆர்ச்சர் 2019, மே முதல் ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று விதமான பார்மெட்டுகளிலும் விளையாடி வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து 2019 உலக கோப்பையை வெல்ல ஆர்ச்சரின் பங்களிப்பும் முக்கிய காரணம். 

2019 உலக கோப்பையின் பைனலில் சூப்பர் ஓவரை வீசியதும் ஆர்ச்சர் தான். அந்த தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய ஆர்ச்சர் இருபது விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

image

150 கிலோ மீட்டர் வேகம் வரை ஆர்ச்சர் பந்து வீசுவார். பந்து வீச்சில் வெரைட்டி காட்டும் ஆர்ச்சர் அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 11 ஆட்டங்கள் விளையாடி 136 டாட் பந்துகளை வீசியுள்ளார். 

சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் ஆர்ச்சர் பந்துவீச்சில் அதிரடி காட்டும் கிரிக்கெட் வீரர் எனவும் சொல்லலாம்.

image

ஷார்ட்டார் பார்மெட் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட்டான ஆர்ச்சர் அடுத்து வரும் நாட்களில் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் பவுலிங்கை யூனிட்டை லீட் செய்யலாம். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.