மத்திய அமைச்சரும், பீஹாரைச் சேர்ந்த அரசியல் தலைவர்களில் மிகவும் முக்கியமானவரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான் காலமானார். அவருக்கு வயது 74. பஸ்வான் மறைவு குறித்த தகவலை அவரது மகன் சிராக் பஸ்வான் தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

மத்திய அமைச்சரவையில் உணவு மற்றும் நுகர்பொருள்துறை அமைச்சராக பதவிவகித்த ராம் விலாஸ் பஸ்வானின் இறப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், ’’என் சோகத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. ராம்விலாஸின் இழப்பை யாராலும் ஈடு செய்யமுடியாது. அவர் இறப்பு எனக்கு தனிப்பட்ட இழப்பு. நான் என்னுடைய நண்பனை, மதிப்புமிக்க சக அரசியல் தலைவரை இழந்துவிட்டேன். ஏழைக்கு உதவுவதில் அதீத ஆர்வம்கொண்டவர் ராம்விலாஸ்’’ என குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது இரங்கல் செய்தியில், ’’மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவால், நமது நாடு ஒரு தொலைநோக்கு பார்வைகொண்ட தலைவரை இழந்துவிட்டது. நாடாளுமன்றத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர். ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களின் குரலாக இருந்தவர்’’ என்று கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.