ஐபிஎல் போட்டிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மோசமாக சொதப்பி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 
image

எப்போதுமே புள்ளிப் பட்டியலில் டாப் லிஸ்டில் இருக்கும். பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என அனைத்திலும் சென்னை ஸ்ட்ராங்காக இருக்கும். ஆனால் நடப்பு சீஸனில் அதெல்லாம் நேர்மாறாக சென்னை அணிக்கு அமைந்துள்ளது. 

இதுவரை ஆடியுள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி. அது கூட அம்பத்தி ராயுடு மற்றும் டுபிளஸின் பேட்டிலிருந்து வந்த ரன்களால் சாத்தியமானது. 

image

மற்றபடி ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் துவங்கி பவுலிங் யூனிட் வரை ப்ளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடிய வீரர்கள் அனைவரும் பெரிதும் சோபிக்கவில்லை. 

குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் படு வீக் என வெட்ட வெளிச்சமானது. 

image

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி பெவிலியன் திரும்ப தோனி வருவார், சென்னையை மீட்டெடுப்பார் என எதிர்ப்பார்த்த சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் எஞ்சியது. 

டெல்லியுடனான அதற்கடுத்த ஆட்டத்திலும் சென்னை தோல்வியை சந்தித்தது.  

இந்நிலையில் ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸின் சின்ன தலயான ரெய்னாவை மீண்டும் விளையாட வரச் சொல்லி செல்லமாக அன்பு கட்டளையிட்டு வருகின்றனர் image

‘COMEBACK Mr.IPL’ என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ரெய்னாவை ட்ரெண்ட் செய்தனர்.

அப்படி சுரேஷ் ரெய்னா என்னதான் சென்னை அணிக்காக செய்துள்ளார்? சி.எஸ்.கே. தற்போது சந்திக்கும் சிக்கல்களை ரெய்னா எப்படி சரி செய்வார் ? 

சென்னை அணியின் பக்கபலமாக 2008 சீஸனிலிருந்தே விளையாடியவர் சுரேஷ் ரெய்னா. 

சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால் சென்னை அணியின் சக்ஸஸ் சீக்ரெட்டில் ரெய்னாவும் ஒருவர். 

சென்னைக்காக 164 போட்டிகளில் விளையாடி 4527 ரன்களை ரெய்னா குவித்துள்ளார். இதில் ஒரு சதமும், 32 அரை சதமும் அடங்கும். 

image

இந்தியாவுக்காக அதிக போட்டிகளில் பின்கள வரிசையில் விளையாடும் ரெய்னா சென்னைக்காக டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இறங்கி விளையாடியவர். 

குறிப்பாக 2015 மற்றும் 2019 சீஸனை தவிர அனைத்து சீசனிலும் சென்னைக்காக 400 ரன்களுக்கு மேல் ரெய்னா குவித்துள்ளார். அதில் மூன்று சீஸனில் 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 

அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபடுவதோடு ஃபீல்டிங்கிலும் ரெய்னா மாஸ் காட்டுவார். 

சமயங்களில் மெயின் பவுலர்கள் ரன்களை அள்ளிக் கொடுக்கும் போது பார்ட் டைம் ஸ்பின்னராகவும் அசத்துவார். 

image

இப்படி தோனியின் சி.எஸ்.கே படையில் படை தளபதியாக ஐபிஎல் தொடர் ஆரம்பமான நாள் முதல் ஜொலித்தவர் ரெய்னா. அவர் இல்லாத சென்னை அணியை எந்தவொரு சென்னை ரசிகரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.

அதனால் தான் சென்னை தற்போது எதிர்கொண்டு வரும் சிக்கலை களைய ரெய்னாவை ரசிகர்கள் அழைக்க காரணமாக இருக்கலாம்.

image

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பியுள்ள அவர் மீண்டும் அணியில் இணைவாரா என்பதே சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.