“உனக்கென்னப்பா ஐடில வேல, லட்சத்துல சம்பளம் செலவு பண்ண தெரியாம ஊர் சுத்த கிளம்பிட்டேன்னு நினைக்கலாம். ஆனா அப்படி இல்லை, வேலையில இருந்த மன அழுத்தம் அதோட தொடர்ச்சியா வேலைய விட்டேன். எல்லாம் போதும்னு கெளம்பி வீட்டுக்கு வந்தா, 18 வயசு கடந்த ஒரு பொண்ணுக்கு இந்த சமூக கட்டமைப்பு விதிச்சிருக்க எந்த விதிமுறைகளும் பிடிக்காம எதோ ஒரு கோபம், ஏதோ ஒரு சின்ன தைரியம் எதைப்பத்தியும் யோசிக்காம நாலு வருஷத்துக்கு முன்ன வீட்ட விட்டு கெளம்பிட்டேன். இப்படித்தான் போடியில இருந்து கெளம்பி இந்தியாவின் பெரும்பான்மையான கிராமங்களை கடந்து இப்போ லாக்டௌன் காரணமா மணாலியில் இருக்கேன்”.

திவ்யா | பயண அனுபவங்கள்

தன் பயணக்கதையின் தொடக்கப்புள்ளியை எந்த வித சலனமுமின்றி கடக்கும் நதியைப்போலவே விவரிக்கிறார் திவ்யா. எந்தத் திட்டமும் இல்லாமல் கையில் கொஞ்சம் சேமிப்பை மட்டும் வைத்துக்கொண்டு தன் பயணத்தைத் தொடங்கிய வாழ்க்கை, பயணங்களால் மட்டுமே அர்த்தமுள்ளாதாக மாறியிருப்பதாக சொல்லும் திவ்யாவிடம் பேசியதிலிருந்து…

எப்படி இருந்தது முதல் பயண அனுபவம்?

திவ்யா | பயண அனுபவங்கள்

யாருக்கிட்டயும் எதுவுமே சொல்லாமதான் கிளம்புனேன். நெருங்கிய தோழிக்கிட்ட மட்டும் ஒரு இன்டர்வியூவுக்காக பாண்டிச்சேரி வரை போறேன்னு சொல்லிட்டு டேரா டூனுக்கு கிளம்பிட்டேன். தனியான பயணம்தான். ரிஷிகேஷ் போனப்போ அங்க ஒரு வெளிநாட்டுப்பயணி பழக்கமானாங்க. அவுங்களுக்கு நேபாளம் போறதுக்கு கூட ஒரு வழித்துணைக்கு ஆள் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. வர்றியானு கேட்டாங்க. அப்படியே அவுங்ககூட சேர்ந்துக்கிட்டேன். இப்படித்தான் போற இடத்துல எல்லாம் என் பயணத்துக்கான துணையா யாரவது எனக்கு கிடைச்சுக்கிட்டே இருந்தாங்க. மனிதர்கள் மேல நம்பிக்கை அதிகமாச்சு. இன்னும் மனுஷங்களுக்குள்ள ஈரத்தை தக்க வச்சுக்கிட்டே இருக்கே… அப்படின்னு இயற்கை மேல இன்னும் காதலாச்சு.

உண்மையைச் சொல்லுங்க. இந்தப் பயணத்துக்குன்னு உங்களுக்கு பொருட்செலவே ஆனது இல்லையா?

திவ்யா | பயண அனுபவங்கள்

ரிஷிகேஷ் போனப்ப அங்க உள்ள சிறு அமைப்புக்கு அவுங்களோட தயாரிப்பு பொருள்களுக்கு சோஷியல் மீடியாவுல கன்டெண்ட் எழுத சொன்னாங்க. பதிலுக்கு சாப்பாடும் தங்குறதுக்கு இடமும் குடுப்பாங்கன்னு போட்ருந்தாங்க. அப்போதான் எனக்கு இப்படி ஒரு எளிமையான பண்டமாற்று முறை இருக்குதுன்னே தெரிஞ்சது. அப்போ இருந்தே கையில காசு இல்ல, நாளைக்கு என்ன ஆகுமோ அப்டிங்கிற பயம் விலக ஆரம்பிச்சது. இன்னும் தைரியமா கிளம்ப ஆரம்பிச்சேன்.

அங்க உள்ள நண்பர்களோட அறிமுகத்தால உத்தராகண்ட் போகலாம்னு முடிவு பண்ணுனேன். உத்தராகண்ட்ல கடைக்கோடில இருக்க பர்கூட்னு ஒரு கிராமத்துல இருக்க குழந்தைகளுக்கு மாற்றுக்கல்வி முறையில டியுசன் எடுக்கணும் சொன்னாங்க. அங்கேயும் சாப்பாடும் தங்குறதுக்கு இடமும் குடுத்தாங்க. எனக்குன்னு பெருசா எந்த செலவும் இருந்தது இல்லை.

உங்களோட பயணத்துல உங்கள பாதிச்ச அல்லது உங்களுக்குள்ள தாக்கத்த ஏற்படுத்திய சம்பவங்கள்…

திவ்யா | பயண அனுபவங்கள்

நான் குழந்தைங்களோடதான் அதிகமா இருந்துருக்கேன். பொருளாதார தடைகளும் சாதிய அடுக்குகளும் படிக்கிற பசங்களோட மனசுக்குள்ள என்ன பண்ணுமோன்னு எனக்குள்ள கோபத்தையும் எதிர்காலத்துல என்னென்ன விளைவுகளை உண்டாக்குமோன்னு பயத்தையும் உண்டு பண்ணுச்சு. கேதர்நாத் பக்கம் போயிருந்தப்போதான் அதை கண்கூடாவே பார்க்க ஆரம்பிச்சேன். உயர் சாதிக்கும் தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கும் வேற வேற பள்ளிக்கூடம்னு கட்டி வச்சுருந்தாங்க. அங்க உள்ள குழந்தைகளுக்கு மதிய சாப்பாட்டுக்கு அரசாங்கம் ஒதுக்கி இருக்க தொகை மொத்தமே நாலு ரூபாய். அந்த நாலு ரூபாய்ல அப்படி என்ன ஆரோக்கியமான சாப்பாடு கிடைச்சுரப்போகுது. அதனால அங்க உள்ள குழந்தைகளை வச்சே அவுங்களுக்கு நல்லா சாப்பாடு கிடைக்க வழி பண்ணுவோம்னு ஃபேஸ்புக் மூலமா நண்பர்களை ஒருங்கிணைச்சு சமையலையும் ஒரு பாடமா வச்சு சாப்பாடும் குடுக்க ஆரம்பிச்சோம்.

இப்படி உடனே உடனே இடத்த மாத்துறதுக்கு கஷ்டமா இல்லையா?

சொன்னா நம்ப மாட்டீங்க… மொத்தமே மூணு ட்ரெஸ், குளிர் தாங்குறதுக்கு ஒரு ஜெர்க்கின் இது மட்டும்தான் என்னோட மொத்த லக்கேஜ். எப்போ வேணும்னாலும் கிளம்பி அடுத்த இடத்துக்குப் போயிருவேன்.

திவ்யா | பயண அனுபவங்கள்

எதிர்கால திட்டம் என்ன?

அப்படி எதும் இல்ல. தலைக்கு மேல வானம் இருக்கு. விழுகாம தாங்கிப்பிடிக்க நிலம் இருக்கு. அடுத்த நொடி அடுத்த நாள் என்னை எங்க இழுத்துட்டு போகுதோ அங்க அப்படியே இறகு போல நகர்ந்து போகட்டுமே இந்த வாழ்க்கை!

திவ்யா | பயண அனுபவங்கள்
திவ்யா | பயண அனுபவங்கள்
திவ்யா | பயண அனுபவங்கள்
திவ்யா | பயண அனுபவங்கள்
திவ்யா | பயண அனுபவங்கள்
திவ்யா | பயண அனுபவங்கள்
திவ்யா | பயண அனுபவங்கள்
திவ்யா | பயண அனுபவங்கள்
திவ்யா | பயண அனுபவங்கள்
திவ்யா | பயண அனுபவங்கள்
திவ்யா | பயண அனுபவங்கள்
திவ்யா | பயண அனுபவங்கள்
திவ்யா | பயண அனுபவங்கள்
திவ்யா | பயண அனுபவங்கள்
திவ்யா | பயண அனுபவங்கள்
திவ்யா | பயண அனுபவங்கள்
திவ்யா | பயண அனுபவங்கள்
திவ்யா | பயண அனுபவங்கள்
திவ்யா | பயண அனுபவங்கள்
திவ்யா | பயண அனுபவங்கள்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.