உலகம் முழுக்க ஆன்லைன் கேம் விளையாடுவது என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அதிகரித்து வருகிறது. அதுவும் இந்தக் கொரோனா சூழலில் அதிக மக்களால் விளையாடப்பட்டது லுடோ கிங் கேம்தான். உலகம் முழுக்க 300 மில்லியன் மக்கள் இந்த கேமை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.

image

ஏற்கனவே, இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இந்தியாவில் மனைவி ஒருவர் தொடர்ச்சியாக கணவனை லூடோவில் தோற்கடித்ததால் இரவு முழுக்க அடித்து கணவர் சித்திரவதை செய்த சம்பவமும், லூடோ விளையாடும்போது தொந்தரவு செய்தவரை நண்பரே சுட்டுக்கொன்ற சம்பவமும், லூடோ விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாததால் தனது அக்கா மீது காவல்நிலையத்தில் சிறுவன் புகார் அளித்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கஅது. 

மேலும், கொரோனா சமயத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லூடோ விளையாடுவதை தனது ட்விட்டர் பக்கதில் பகிர்ந்து ’யாரெல்லாம் லூடோவுக்கு அடிமையாகிவிட்டீர்கள்’ என்று கேட்டிருந்தார்.

 image

இந்நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், போபால் குடும்ப நீதிமன்றத்தில் “நான் எனது தந்தையை மிகவும் நம்புகிறேன். ஆனால், அவர் லூடோ கேமில் என்னை ஏமாற்றுவார் என்று எதிர்பார்க்கவில்லை” என்று வழக்குத் தொடுத்துள்ளார்.

 

 கேமிற்காக தந்தை மீதே வழக்குத்தொடுத்த இளம்பெண்ணுக்கு உளவியல் ரீதியாக நான்கு முறை உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று நீதிமன்ற ஆலோசகர் சரிதா கூறியுள்ளார்

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.