ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றி முகத்திற்கு திரும்பும் முனைப்பில் தயாராகி‌ வருகிறது.

image

முதல் போட்டியில் சூப்ப‌ர் ஓவர் வரை சென்று வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ள ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி, வெற்றியை தொடரும் முனைப்பில் ‌பயிற்சி செய்து வருகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ‌சென்னை அணி 15 ஆட்டங்களிலும், டெல்லி அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.