நடப்பு 2020-ம் ஆண்டின் ஏப்ரல் – ஜூன் மாதங்களில் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் சுமார் 19,964 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,867 மோசடிகள் நடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சந்திரசேகர் கவுர் என்ற சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி இவ்வாறு பதிலளித்துள்ளது. இதில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் 2050 மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் மோசடிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மோசடியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வங்கி பேங்க் ஆஃப் இந்தியாவாகத்தான் இருக்கிறது.

Reserve Bank of India

12 பொதுத்துறை வங்கிகளில், அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் 2,325.88 கோடி ரூபாய் மதிப்பிலான 2050 மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 5,124.87 கோடி மதிப்புள்ள 47 மோசடி வழக்குகள், கனரா வங்கியில் 3,885.26 கோடி மதிப்பிலான 33 வழக்குகள், பேங்க் ஆஃப் பரோடா 2,842.94 கோடி மதிப்பிலான 60 வழக்குகள், இந்தியன் வங்கியில் 1,469.79 கோடி மதிப்பிலான 45 வழக்குகள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 1,207.65 37 கோடி மதிப்பிலான 37 வழக்குகள் மற்றும் பாங்க் ஆஃப் மகாராஷ்ட்ராவில் 1,140.37 மதிப்பிலான 9 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

Also Read: என்ன சொல்கிறது வங்கி திவால் சட்டத்திருத்த மசோதா… யாருக்கு என்ன பயன்?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 240 மோசடிகள் கண்டறியப்பட்டிருந்தாலும் அதன் மதிப்பு 270.65 கோடியாகத்தான் உள்ளது. யூகோ வங்கியில் ரூ.831.35 கோடி மதிப்பிலான 130 வழக்குகள், செண்ட்ரல் வங்கி ரூ.655.84 கோடி மதிப்பிலான 149 வழக்குகள், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ரூ.163.3 கோடி மதிப்பிலான 18 வழக்குகள், யூனியன் பாங்க் ஆப் இந்தியா ரூ .46.52 கோடிய மதிப்பிலான 49 மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

Bank fraud

வங்கிகளின் முதல் அறிக்கையைத் தொடர்ந்து (தனிநபர் மோசடி) செய்யப்படும் திருத்தத்தைப் பொறுத்து தரவு மாறக்கூடும் என்றும் ரிசர்வ் வங்கி அதன் பதிலில் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் சைபர் பாதுகாப்புச் சட்டங்கள் பலபடுத்தப்பட்டு இருந்தாலும், ஆன்லைன் மோசடி பேர்வழிகள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அதனால்தான் வங்கி மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் தங்களது பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் இன்னும் மக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.