கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ‌ஐக்கிய அரபு அமீரகத்தில் ‌இன்று தொடங்குகிறது.

ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு, வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் என வித்தியாசமான முறையில் நடக்கப் போகிறது 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர்‌‌. கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்தல், அதனைத் தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்ட 8 அணிகளும், யுத்தத்திற்கு ஆயத்தமாக களம் காண்கின்‌றன. வழக்கமாக ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், தற்போது முதல்முறையான மைதானத்தில் ரசிகர்கள் இன்றி ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. ‌

image

சியர்லீடர்ஸ் எனப்படும் நடன அழகிகளின் கலக்கல் நடனத்தை இம்முறை காண முடியாது. நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க, வீரர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. மைதானத்திற்குள் நுழையும் வரை ஒவ்வொரு வீரரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். டாஸ் போடும்போதும், போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டத்தின் இடையே தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள்‌ எடுத்துவரப்படும்போது, வீரர்கள் கையை கிருமிநாசினியால் சுத்தம் செய்த பிறகு அவற்றை பருக வேண்டும். இன்று முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை களைகட்டவுள்ள ஐபிஎல் தொடரில், ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

image

முதல் ஆட்டத்திலேயே நடப்புச் சாம்பியனான மும்பை அணியும், முன்னாள் சாம்பியனான சென்னை அணியும் மோதுவது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.