“ரஜினி முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும்” – ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

நடிகர் ரஜினிகாந்த தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் இல்லை என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர் முதலில் சொல்லும் நான் சம்மதித்தேன். ஆனால் முழு மனதோடு ஏற்கவில்லை. இது என்னுடைய எண்ணம் மட்டும் இல்லை. பெரும்பாலான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பும் இதுவாகவே இருக்கிறது.

ரஜினி முதல்வர் வேட்பாளர் என்றால் நான் வேலை செய்யத் தயார். ஆனால் வேறு யாருக்கும் வேலை செய்யத் தயாராக இல்லை. இதுகுறித்து தலைவரிடம் சொல்லி புரிய வைக்க முயற்சிப்பேன். முடியவில்லை என்றால் நான் எனது தனிப்பட்ட சேவையை தொடர்ந்து செய்வேன். தயவுசெய்து தலைவர் அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நீங்க வந்தா நாங்க வரோம். இப்போ இல்லனா வேற எப்போ? நவம்பர்?” எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM