ஓடிடியில் வெளியாகிறதா விஜய் சேதுபதியின் “மாமனிதன்” ?

விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

பொதுமுடக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், ஓடிடியில் நேரடியாக படங்கள் வெளியாவது அதிகரித்து வருகின்றது. அந்த வகையில், அடுத்தடுத்து அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படமும் ஓடிடியில் வெளியாவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

image

விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். விஜய் சேதுபதியின், க/பெ ரணசிங்கம் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM