மின்கம்பி அறுந்துவிழுந்ததால் மூச்சற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் 36 மணிநேரத்திற்குப் பிறகு உயிர்பெற்றுள்ளான்.

டெல்லி பழைய குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு கடையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி பலத்த மழை காரணமாக மின்கம்பி அறுந்து ஒரு 16 வயது சிறுவன்மீது விழுந்தது. அதீத மின்சாரம் தாக்கியதால் மூச்சற்ற நிலையில், இந்திரபிரஸ்தா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவனது உடலில் மின்சாரம் ஓடிக்கொண்டிருப்பதாகக் கூறியிருக்கின்றனர். அதனால் ரத்த அழுத்தம் குறைந்து, இதயத்துடிப்பு நின்றுபோனதையும் கண்டறிந்துள்ளனர். இதனால் சிறுவனுக்கு மாரடைப்பும் ஏற்பட்டிருக்கிறது.

இதுபற்றி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவு தலைமை மருத்துவர் பிரியதர்ஷினி பால் கூறுகையில், ’’சிறுவனின் மோசமான நிலையை பார்த்தவுடனே சிபிஆர் சிகிச்சை கொடுத்தோம். இல்லாவிட்டால் மூளை பாதிப்படைந்துவிடும். சிறுவனுக்கு 45 முறை பிசிஆர் சிகிச்சை கொடுத்தோம். சரியான நேரத்தில் கொடுத்த சிகிச்சையால் சுமார் 36 மணிநேரம் கழித்து சிறுவனுக்கு சுயநினைவு திரும்ப வந்தது. ஆக்ஸ்ட் 5ஆம் தேதி சிறுவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்’’ என்கிறார்.

image

சரியான நேரத்தில் சிபிஆர் சிகிச்சை கொடுக்கப்படாவிட்டால் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூளை பாதிப்பு ஏற்படும். சில நேரங்களில் சுயநினைவு திரும்பினாலும், உடல் நடுக்கம், பக்கவாதம், ஞாபக மறதி, பதிலளித்தல் போன்ற செயல்களில் பாதிப்பு ஏற்படும். ஆனால் இந்த சிறுவன் அதிர்ஷவசமாக காப்பாற்றப்பட்டுள்ளான் என்கிறார் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் சுதீர் தியாகி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.