சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடப் போகும் 11 வீரர்கள் யார் ? என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வரும் சனிக்கிழமை அன்று துபாயில் ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது.

image

நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு நடைமுறைகளை பிசிசிஐ அமல்படுத்தியுள்ளது.

துபாயில் முகாமிட்டுள்ள சிஎஸ்கே அணியிலிருந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா கடந்த சில நாட்களுக்கு முன்னர் சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்பியதால், இந்த முறை தோனி தலைமையிலான சென்னை அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க போகும் வீரர்கள் யார் ? என்ற கணிப்புகள் ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.  

image

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா சென்னை அணியின் பிளேயிங் லெவேன்யில் விளையாட உள்ள பதினோரு வீரர்களின் உத்தேச பட்டியலை வெளியிட்டுள்ளார். 

image

சோப்ரா கூறும்போது, “ஷேன் வாட்சன் மற்றும் அம்பாதி ராயுடு ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களம் இறங்க வேண்டும். அதை தொடர்ந்து ரெய்னா இறங்கி விளையாடும் பொசிஷனில் டு பிளெஸ்ஸி, நான்காவதாக கேதார் ஜாதவ் மற்றும் மிடில் ஆர்டரில் தோனி, ஜடேஜா, பிராவோ விளையாட வேண்டும். இதன் மூலம் பேட்டிங்கின்போது பிற்பாதியை சென்னை அணி பேலன்ஸ் செய்யலாம். 

image

பவுலிங் யூனிட்டில் இம்ரான் தாஹிர், பியூஷ் சாவ்லா, தீபக் சஹார், ஷர்துல் தாகூர் இடம் பிடிப்பது தான் சரியான பிளேயிங் லெவேன் கொண்ட அணியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார். 

image

இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் அல்லது அனுபவ வீரர் முரளி விஜயும் வாட்சனுடன் சென்னைக்காக ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களம் இறங்கவும் வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

அதேபோல ஆல் ரவுண்டர்கள் சாம் கரன், சான்டனர் மாதிரியான வீரர்களும் சென்னை அணிக்காக விளையாடி அசத்தலாம். 

image

வேகப்பந்து வீச்சில் லுங்கி நிகிடி, ஜோஷ் ஹசல்வுட் மற்றும் சுழற்பந்து வீச்சில் கரண் ஷர்மாவும், தமிழக வீரர் சாய் கிஷோரும் விளையாட வாய்ப்புகள் உள்ளன. 

image

வரும் சனிக்கிழமை அன்று நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதவுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.