கொரோனா பொதுமுடக்கத்தால் பெரும்பாலனவர்களின் திருமணம் தள்ளிப்போயுள்ளது. பலர் எளிமையான முறையிலும் திருமணம் செய்துகொள்கின்றனர்.

திருமணம் செய்துகொள்பவர்களில் பலர் வித்தியாசமான முறையில் மணமுடித்து புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரிட்டனில் ஒரு தம்பதியினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழு அளவு கட் அவுட்டுகளை வைத்து விநோதமான முறையில் திருமணம் செய்துள்ளனர்.

image

பிரிட்டனைச் சேர்ந்த ரோமானீ – சாம் ரொண்டேயூ ஸ்மித் தம்பதியினர் இந்த ஜூலை மாதமே திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் பொதுமுடக்கம் காரணமாக உறவினர்கள் யாரும் வரமுடியவில்லை. அதனால் திருமணம் ஆகஸ்ட் 14 க்கு தள்ளிப்போயுள்ளது. பிரிட்டனின் ஊரடங்கு கட்டுப்பாடுகள்படி, வெறும் 14 பேர் மட்டுமே திருமணத்தில் பங்குபெற முடியும்.

கட்டுப்பாடுகள் அப்படி இருக்கையில் வித்தியாசமான முறையில் திருமணத்தை முடிக்க அந்த தம்பதியினர் திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த தம்பதி 2 லட்சம் ரூபாய் செலவுசெய்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழு அளவு கட் அவுட்டுகளை கார்டுபோர்டு அட்டையில் செய்துவைத்து திருமணம் செய்துள்ளனர். அந்த கட் அவுட்டுகள் முன்பு நின்று புகைப்படம் எடுத்து அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி பலரின் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பெற்றது.

Some weddings we go to the guests can be a bit static but these guys really took it to a new level! Throw in #facemasks…

Posted by Hawaiian Shirt Photography on Wednesday, 26 August 2020

இதுபற்றி அந்த தம்பதியர் கூறுகையில், இதற்குமுன்பு மணமகளின் தோழி ஒருவர், நாஷ்வில்லேயில் நடந்த ஒரு திருமணத்திற்கு வரமுடியாததால் அவரின் கட் அவுட்டை வைத்துவிடலாம் என விளையாட்டாக சொல்லி சிரித்ததை நினைவு கூர்ந்திருக்கிறார். இதைவைத்தே இந்த ஐடியா தோன்றியதாக கூறுகின்றனர்.

தங்கள் திருமணத்திற்கு அழைக்க விரும்பிய 100 பேரின் புகைப்படங்களை அனுப்பச்சொல்லி கட் அவுட்களை செய்துவைத்து திருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளனர். இவர்களின் புகைப்படங்களை எடுத்த ஹவைன் ஷர்ட் போட்டோகிராபி, 7க்கும் அதிகமான புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாகவும், அது பலரின் பாராட்டுக்களையும் பெற்றதாக அவர்கள் கூறுகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.