ஒவ்வொரு நாளும் நாம் பருவ நிலை மாற்றம், கார்பன் உமிழ்வு, புவி வெப்பமயமாதல் போன்ற சூழல்களைச் சமாளிக்க மரங்களை வளர்ப்பது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், காற்றில் அதிகரிக்கும் கார்பன் உமிழ்வு காரணமாக வேகமாக வளரும் மரங்கள் விரைவிலேயே பட்டுப்போய்விடுவதாக சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக லீட்ஸ் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை உலகளவில் மேற்கொண்டது. ஆப்பிரிக்கா, அண்டார்டிகா கண்டங்களைத் தவிர மற்ற கண்டங்களைச் சேர்ந்த மரவளையங்களின் தரவுகளை ஆய்வு செய்தனர். மேலும் அப்போது 110 மர வகைகளின் வளர்ச்சியையும் கணக்கிட்டனர்.

image

அதில் 82 மர வகைகளின் வளர்ச்சி மற்றும் நீண்ட ஆயுள் பற்றி முழுமையாக பகுப்பாய்வு செய்யப்பட்டது. கார்பன் உமிழ்வு அதிகரிப்பதன் காரணமாக வேகமாக வளரும் மரங்கள் விரைவிலேயே பட்டுப்போய் மடிந்துவிடுவதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்தது.

image

“காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு கலந்திருப்பது மரத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால் அதன் அளவு அதிகரிப்பது மரங்களின் நீண்ட ஆயுளுக்கு நல்லதல்ல ” என்கிறார் லீட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் ரோயில் ஃப்ரெய்னன்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.