சமீபத்தில் ஒரு பிரபலமான உணவு விநியோகஸ்த நிறுவனம் பெண்கள் வருடத்தில் 10 நாட்கள் பீரியட் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தது. இதற்கு பல தரப்பிலிருந்தும் சமூக ஊடகங்களில் பலவிதமான கருத்துக்களை தெரிவித்தனர். ஒரு சிலர் மாதவிடாய் பற்றிய இந்த முற்போக்கான முடிவை வரவேற்ற அதே சமயத்தில், வேறு சிலர் இதை வேறு கண்ணோட்டத்தில் பார்த்தனர். இதுகுறித்து ஈ-டைம்ஸ்  விவாதம் ஒன்றை நடத்தியுள்ளது. 

ஆண்களும் பெண்களும் வெவ்வேறு உயிரியல் யதார்த்தங்களுடன் பிறந்தவர்கள் என்பது பணியிடங்களில் பலருக்கும் புரிவதில்லை என்கிறார் மும்பையைச் சேர்ந்த ஊடக வல்லுநர் ஷிபிகா. பெண்களுக்கு மாதவிடாய் வலி என்பது இயல்புதான். ஆனால் பெண்கள் வளரும்போதே அவர்களுடைய தாய்மார்களால் ’மாதவிடாய் வலி என்பது மிகவும் கடினமானது. அதை சமாளிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்’ என்று சொல்லி சொல்லியே வளர்க்கப்படுகிறார்கள். ஒரு பணியிடத்தில் நுழையும்போது, மிகவும் கடினமான உடல்வலியை சமாளிக்க வேலை நேரத்தில் ஒருநாள் விடுப்பு எடுப்பது என்பது தொழில்சார்ந்தது அல்ல என்கிறார் அவர்.

இந்த விடுப்பை அளிப்பதற்கு எடுத்திருக்கும் முடிவைப்போலவே மாதவிடாயின் போது ஒவ்வொரு பெண்களுக்கும் இருக்கும் அனுபவங்களும் வித்தியாசமான இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் டெல்லியைச் சேர்ந்த மருத்துவ கல்வியாளர் டாக்டர் அக்‌ஷா ஷேக். சில பெண்களுக்கு இது சாதாரணமாக மாதந்தோறும் நடக்கும் ஓர் நிகழ்வு. சில பெண்களுக்கும் வலியையும், அசௌகர்யத்தையும் உண்டாக்கும் ஒன்று. இதனால் சில பெண்களுக்கு வேலை செய்வதில் சிரமம் இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். உடலில் பிற பிரச்னைகள் ஏற்படும்போது மருத்துவ விடுப்பை வழங்கும்போது, இதை பிரத்யேகமாக முன்வைக்காமல் மாதவிடாய் விடுப்புகளை அதிலேயே ஏன் அனுமதிக்கக்கூடாது என்கிறார் அக்‌ஷா.

image

இந்த முடிவுக்கு எதிராக பத்திரிகையாளர் பர்கா தத் பேசியிருக்கிறார். இதுபோன்ற முடிவுகள் மீண்டும் பெண்களை தனிமைப்படுத்தி விடும் அல்லது அவர்களுடைய உடல்வலியை அதிகரித்து காட்டும். இதனால் நாட்டில் பெண் தொழிலாளர்கள் குறைந்துவிடுவார்களோ என்ற பயம் உண்டாகிறது. 2017-18ஆம் ஆண்டு அறிக்கையின்படி, பெண் தொழிலாளர் விகிதம், 23.3 சதவீதமாக குறைந்துள்ளது என்கிறார்.

சென்னையில் எம்.என்.சி கம்பெனியில் பணிபுரியும் மனிதவள வல்லுநரான தீபா, இந்திய தொழில்துறையில் பாலின பாகுபாட்டை ஏற்படுத்திவிடும் என்கிறார். இதுபோன்ற முடிவுகள் நிச்சயமாக பல நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் ஐ.டி. நிறுவனங்களைப் பொறுத்துவரை, பாலின பாகுபாடு மிகவும் வெளிப்படையானது. பெண்களுக்கு கர்ப்பம், திருமணம் போன்றவற்றை வேலையில் இருக்கும் பலவீனங்களாகவே கருதுகிறார்கள். அவர்களை பணியமர்த்தும்போதும், இவை முடிவெடுக்கும் காரணிகளாக அமையும். மேற்கத்திய நாடுகளில் மாதவிடாய் காலங்களை பெரும்பாலும் கருத்தில் கொள்வதில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, பணியிடங்களில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் இதுபோன்ற முடிவுகளைக் கையாள அதிக நேரமும், முதிர்ச்சியும் தேவை என்கிறார் அவர்.

image

ஆண்கள் என்ன நினைக்கிறார்கள்?

மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கையாக நடக்கும் ஒன்று. அதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. சமத்துவம் என்பது அவர்கள் இயல்பாக செயல்பட உதவுவதாகும். இதுபோன்ற கொள்கைகளை மேலும் பல நிறுவனங்கள் கொண்டுவர வேண்டும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த வீடியோ தயாரிப்பாளர் ரங்கா.

பெண்களை பெரும்பாலும் தாழ்வாகவே நினைக்கின்றனர். இது அவர்கள் வாழ்நாள் முழுவதும் போராடும் போராட்டம். மாதவிடாய்க்கு விடுப்பு எடுக்க வேண்டுமா இல்லையா என அவர்கள் தீர்மானிக்க ஒரு வாய்ப்புக் கொடுத்திருப்பதை நல்ல முடிவாகவே கருதுகிறேன். அந்த குறிப்பிட்ட பெண்ணின் விருப்பத்திற்கு மரியாதைக் கொடுப்பதை சிறந்ததாக நினைக்கிறேன் என்கிறார் கொல்கத்தாவைச் சேர்ந்த எழுத்தாளர் மனீஷ்.

courtesy – Times of India

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.