விஷ்ணு கதையில் வரும் நரசிம்ம அவதாரத்தைப் போல் இந்தியாவின் பொது மற்றும் தனியார் துறைக்கு இடையிலான விரிசலைக் குறைக்க வழக்கத்திற்கு மாறான தீர்வுகளைத் தேட வேண்டியிருக்கிறது என்று இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பேசியிருக்கிறார்.

விண்வெளித் துறையில் இந்தியாவின் சாத்தியக்கூறுகளை அதிகரிப்பது குறித்து இஸ்ரோ ஏற்பாடு செய்திருந்த ஒரு வெபினாரில் ஆனந்த் இவ்வாறு பேசியிருக்கிறார். விண்வெளியில் தனியார் துறை பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், விண்வெளித் துறையில் வரலாற்று சீர்திருத்த மாற்றங்களை அரசு வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகு அவர் பேசியுள்ளார்.

இந்த நடவடிக்கை வரவேற்ற மஹிந்திரா, விண்வெளியின் இரண்டாவது எல்லை இப்போது திறக்கப்படுகிறது. விண்வெளி வணிகமயமாக்கலின் எல்லை. விண்வெளியை ஆராயும் தேசமாக, விண்வெளியை தேசமாக மாறுவதைப் பார்க்கவேண்டிய நேரம் இது. வானவில்லின் கடைசியில் அதிகமாக உள்ள தங்கநிறத்தைப்போல வணிகத்திற்கும், அரசாங்கத்திற்கும் இதில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

2018ஆம் ஆண்டில் சந்தை சுமார் 350 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டது. 2040இல் இது 3.3 டிரில்லியன் டாலர்களாக வளரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா ஒரு நம்பிக்கைக்குரிய விண்வெளித் திட்டத்தைக் கொண்டிருந்தாலும், இந்த சந்தையில் அதன் பங்களிப்பு மிகவும் குறைவு.

‘’உலகளவில் விண்வெளி பொருளாதாரத்தை ஊக்குவிக்க செலவு திறன், மலிவான கண்டுபிடிப்பு மற்றும் உயர்நிலை பொறியியல் திறன்கள் என்ற மூன்று முக்கிய இயக்கிகள் உள்ளன. மகிழ்ச்சியுடன், இந்த மூன்றையும் நாம் ஏராளமாக வைத்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

image

ஆனால் தொழில்துறையும், பொதுத் துறையும் முற்றிலும் மாறுபட்டவை. இங்குதான் இறைவனின் நரசிம்ம ஒற்றுமை வருகிறது.
ஒரு மனிதனின் அறிவையும், புத்தியையும் சிங்கத்தின் பயமின்மை, வேகம், வலியை மற்றும் கொல்லும் திறனுக்கு ஒப்பிடலாம். விஷ்ணு ஹிரண்யகஷ்யப் என்ற அரக்கனை அழிக்க பாதி மனிதன் மற்றும் பாதி சிங்க அவதாரத்தை எடுத்தார். இந்தக் கதை மனதில் வைத்து, இதற்குமுன்பு இல்லாத கட்டமைப்புகள் மற்றும் அமைப்புகளை உருவாக்குவது பற்றி சிந்திக்கவேண்டும். நரசிம்மர் போன்று அடுத்த தலைமுறை சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்ற சிந்தனை நமது வேலையின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். விண்வெளியில் தொழில்முனைவோருக்கு வாய்ப்புகளை அமைத்துத் தரவேண்டும் என்று பேசியுள்ளார்.

மங்கல்யான், சந்திராயன் மற்றும் பி.எஸ்.எல்.வி போன்றவற்றின் வெற்றி, டெலிகாம், வீடியோ, எர்த் அப்சர்வேஷன், நேவிகேஷன் போன்ற துறைகளில் இந்தியாவின் திறமையை நிரூபித்துள்ளது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிக வளர்ச்சி விகிதத்தைக் காட்டும்.

இஸ்ரோ தனியாக இயங்கத் தேவையில்லை. தனியார் துறையை பெருமளவில் ஊக்குவிப்பதன் மூலம் இதன் வேகத்தை துரிதப்படுத்த முடியும். இது உயர்மட்ட விண்வெளி ஆய்வுகளுக்கு இஸ்ரோவை ஊக்குவிக்கும் என்றும் பேசியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.