2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஆய்வுப் பணிகளை துவங்கி உள்ளதாக  கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோவையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” தமிழகத்தில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு தொழில் முதல் பெட்டிக்கடை வைத்திருப்பவர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மோடி அரசு கொரோனா காலத்தில் நிதியை ஒதுக்கியதாக தெரிவித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த பயனையும் அடையவில்லை. 6 மாத காலத்திற்கு வங்கிக்கடனை ரத்து செய்ய செய்ய வேண்டும்.

வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான ஆய்வுப் பணிகளை துவங்கியுள்ளோம். நடைபயணம், அரசியல் மாநாடு போன்ற நிகழ்வுகள் அடுத்தடுத்து நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தமிழகத்தில் 6 தலைநகரம் வைத்துக்கொண்டாலும் தவறில்லை. பொது நன்மை கருதி அரசு தெரிவிக்கும் அறிவிப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். கடவுள் உணர்வை மனதுக்குள் வைத்துக்கொண்டு மக்களுக்கும், சமுதாயத்திற்கும் பாதிப்பில்லாமல் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.