பி.பி.எஃப்:

மத்திய, மாநில அரசுப் பணியினர், பொதுத்துறை நிறுவனம், தனியார் நிறுவனம் மற்றும் பல்வேறு வணிக அமைப்புகளில் பணிபுரிந்துகொண்டு சம்பளம் பெறுவோருக்கு மட்டுமே இருந்துவந்த பிராவிடன்ட் ஃபண்ட் வசதி 1968-ல் பொதுமக்களுக்கும் பொதுவாக்கப்பட்டது. அதுதான், ‘பொதுமக்கள் பிராவிடன்ட் ஃபண்ட்’ எனப்படும் பி.பி.எஃப்.

இந்தியாவில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் அனைவரும், இன்றைக்கும் என்றைக்கும் பி.பி.எஃப் உறுப்பினராகலாம். அந்த வகையில் முந்தைய பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள இ.பி.எஃப்., ஜி.பி.எஃப் மற்றும் சி.பி.எஃப் திட்டங்களில் உறுப்பினராகவுள்ள சம்பளதாரர்கள், பி.பி.எஃப்-லும் சேரலாம். சந்தா செலுத்தி வரலாம். அதாவது,

இ.பி.எஃப் + பி.பி.எஃப்

ஜி.பி.எஃப் +பி.பி.எஃப்

சி.பி.எஃப் + பி.பி.எஃப்

வி.பி.எஃப்: ‘விருப்பத்தின் பேரிலான பிராவிடன்ட் ஃபண்ட்’ என்பதைத்தான் ‘வி.பி.எஃப்’ என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால். இ.பி.எஃப்., ஜி.பி.எஃப்., சி.பி.எஃப் போன்று வி.பி.எஃப் ஒரு தனி நிதியமல்ல.

இ.பி.எஃப்-ல் உறுப்பினராகவுள்ள ஓர் ஊழியர் மாதந்தோறும் தனது அடிப்படைச் சம்பளம் + அகவிலைப்படி கூட்டுத்தொகையில் 12% தொகையை இ.பி.எஃப்–க்கு மாதச் சந்தாவாகச் செலுத்த வேண்டும் என்பது கட்டாயம்.

இந்த 12% சந்தா தொகைக்கும் அதிகமான தொகையை தனது இ.பி.எஃப் நிதியத்தில் சந்தாவாகச் செலுத்த விரும்பும் ஊழியர் நிறுவனத்தின் ஒப்புதலுடன் அதிகப்படியான சந்தாவைப் பிடித்தம் செய்யக் கோரலாம். இவ்வாறு 12% சந்தாவுக்குமேல் அதிகமாகச் செலுத்தும் ‘தொகையே’ வி.பி.எஃப் எனப்படுகிறதே தவிர, இப்படி ஒரு தனி பிராவிடன்ட் ஃபண்ட் இல்லை.

– ‘இன்றைக்குக் கையில் கிடைத்திருக்கும் 100 ரூபாயில், எத்தனை ரூபாயைத் தக்கவைத்துக் கொண்டால், நாளைய பணத் தேவையைச் சமாளிக்கப் போதுமானதாக இருக்கும்…’ என்ற சிந்தனையை நம்மிடையே பரவலாக்கி, நம்மையெல்லாம் பணக்கணக்குப் போடவைத்திருக்கிறது கொரோனா!

நாளைய பணத் தேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 85 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதே ‘பிராவிடன்ட் ஃபண்ட்’ என அறியப்படும் முதன்மை ஓய்வுக்கால நிதியமான வருங்கால வைப்புநிதி. சுருக்கமாக, இதை ‘பி.எஃப்’ என்று குறிப்பிடுவது நடைமுறை.

அன்றைக்கு உருவாக்கப்பட்ட பி.எஃப்., இன்றைய தேதியில் ஐந்து வகைகளாக உள்ளது. அவற்றுள் ஒவ்வொரு பி.எஃப்-க்குமான சந்தா தொகையின் சதவிகித அளவு, வட்டி விகிதம், வட்டி கணக்கிடும் முறை, வரிச் சலுகை, வருடாந்தர வளர்ச்சி, வாரிசு உரிமை போன்ற அம்சங்கள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. அதுமட்டுமன்றி, ஒவ்வொரு பி.எஃப்-க்குமான விதிமுறைகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டும்வருகின்றன. எனவே, இந்த ஐந்து பி.எஃப் வகைகள் பற்றி நன்கு தெரிந்துகொள்வோம்.

ஐந்து பி.எஃப் வகைகள் தொடர்பான முழுமையான புரிதல் தரும் கைடன்ஸ் கட்டுரையை நாணயம் விகடன் இதழில் விரிவாக வாசிக்க க்ளிக் செய்க… https://bit.ly/3k4lSIT > ஐந்து வகை பிராவிடன்ட் ஃபண்டுகள்! – அள்ளித் தரும் வாய்ப்புகள்..! https://bit.ly/3k4lSIT

சிறப்புச் சலுகை

விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிப்பதுடன், 15 ஆண்டுகால பொக்கிங்களிலும் வலம் வரலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.