பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு ரூமியின் கவிதை இப்படி செல்லும்.

உனது உடைமைகளை அடைகாக்க

அற்பத்தனத்துடன் கேலி பேசுகிறாய்.

மறந்துவிட்டாய் நீ

தனக்கென எதுவும் கொள்ளாத

மனித உறவைப் பேரப்படுத்தாத

ஒருவர்

உண்டு என்பதை.

மனித உறவை பேரப்படுத்தாத அன்பு, பெரும்பாலும் தமையன்களையே சாரும். தாய், தந்தை, தமக்கை, தோழியென பல அன்பின் அருவிகள் கொட்டினாலும், சகோதர உணர்வென்பது அனைத்தையும் விஞ்சி நிற்பதல்லவா? வடஇந்தியாவில் ஆரவாரமாகக் கொண்டாடப்படும் சகோதர திருவிழாதான் ரக்‌ஷா பந்தன்.

ரக்‌ஷா பந்தன்

ரக்‌ஷா பந்தன் என்றால் பாதுகாப்பு பிணைப்பு என்று குறிக்கும். அன்றைய தினத்தில் சகோதரிகள், தங்கள் சகோதரனுக்கு ராக்கி கட்டிவிடுவதன் மூலம் ஆயுளுக்குமான பிணைப்பை மறுஉறுதியிட்டு கொள்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

ராக்கியைக் கட்டிவிடும் சகோதரி, அந்த தமையனின் ஆயுளுக்குமான நலத்திற்காக பிரார்த்தனை வைப்பதாகவும், ராக்கியைக் கட்டிக்கொண்ட சகோதரனோ, அந்த தங்கையின் பாதுகாப்பிற்கும் நலத்திற்கும் காவலனாக ஆகிவிடுவதாகவும் நம்பப்படுகிறது.

கண்ணனின் கையில் எதேச்சையாக அடிபட, திரௌபதி தன் சேலையைக் கிழித்து அவன் காயத்துக்கு மருந்தாய் கட்டிவிட்ட நாள் இதுதான். அந்த நிகழ்வினை அடிப்படையாக கொண்டே, அவளின் தமையனாக கண்ணன், கெளரவ சபையில் பாஞ்சாலியின் மானம் காத்தான் என்றும் வழங்கப்படுகிறது.

நிஜமாவே உங்க வாழ்க்கை-ல முன்னேறணும்னு ஆசை இருந்தா உங்கள உங்களுக்காகவே சப்போர்ட் பண்ணி முன்னேற வைக்குற சூப்பர்-சப்போர்ட்டரை உங்க கூட வச்சிக்கோங்க” என்கிறது ஒரு ஜப்பானிய பழமொழி.

இதனை வாசிக்கும் தருணங்களிலெல்லாம் அண்ணன் தான் நினைவுக்கு வருவார். உண்மையில் அண்ணன் என்ற உணர்வு ஆழமானது. அன்பில் நெகிழ்ந்தும் விஞ்சித்தும் நிற்பது அந்த உறவில் மட்டுமே நிகழும். சொந்தங்களில் மட்டும்தான் தமையன் அமைய வேண்டுமா என்ன? எனக்கும் என் அண்ணனுக்குமான அன்பு சொந்தத்தைத் தாண்டியதுதான். ஆனால், அது சொந்தமாக மாறிப்போன தருணங்கள் என்றும் பசுமையானவை.

ரக்‌ஷா பந்தன்

உண்மையில் அண்ணன் – தங்கை உணர்வென்பது யதார்த்தத்திற்கும் எதிர்பார்ப்பிற்குமான அழகான ஊடல். எங்கண்ணனும் அண்ணியும் பயங்கரமான யதார்த்தவாதி. நான் அப்படியே எதிர்ப்பதம். ரொம்ப எதிர்பார்ப்பேன்.

சோசியல் மீடியாவில், அண்ணன் பார்க்கவே மாட்டார் என்று தெரிந்தும் அவர்களை டேக் செய்து ஏதாவது எழுதிவிட்டு அவர்களை கெஞ்சி கூத்தாடி பார்க்கச் சொல்லி, லைக் வாங்குவதெல்லாம் அல்டிமேட் டுபாக்கூர் லெவல்.

Also Read: சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன் #HappyRakshaBandhan

அண்ணணிடம் ஒவ்வொரு நாளும் எல்லாவற்றையும் கொட்டிவிட்டால் தான் நாள் நிறையும் எனக்கு. ரக்‌ஷா பந்தன் என்று நினைவு வந்ததும், போன வருஷம் அண்ணனுக்காக செய்துக் கொடுத்த ராக்கியும், இப்போது பக்கத்தில இல்லாமல் தூரமாக வந்துட்விட்டோம் என்கிற எண்ணமும் அதிகமாக என்னைப் பாதித்தது.

இந்த வருஷம் அண்ணனுக்கு என்ன கிஃப்ட் வாங்கிக் கொடுக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். புக் வாங்கிக் கொடுக்கலாம் என்றால், இதுவரைக்கும் வாங்கி கொடுத்த புத்தகங்கள் என்னை முறைப்பது மாதிரியே ஒரு ஃபீலிங். அதிலும் ஒரே புத்தகத்தை இரண்டாவது முறை வாங்கி கொடுத்த மொமெண்டெல்லாம் நியாபகம் வந்துதொலைத்து, என் மனசு என்னைக் கிழித்து தோரணம்கட்டிவிட்டது.

பேனா கொடுத்தால் உறவு முறிந்துவிடும் என்று எங்கேயோ கேட்ட சென்டிமெண்ட் வந்து தடை போட்டுவிட்டது. லாக்டௌனில் நான் எங்கு போய் தேடி எடுத்து வாங்க?

சென்னை, திருச்சி, திருநெல்வேலியின் நகரவீதிகளில் கால்தேய நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருக்கிறது.

அண்ணன் தங்கை

Virtual Gift மாதிரி எழுதி அனுப்புவோம் என்று முடிவு செய்து எழுத உட்கார்ந்தேன். குணா கமல் போன்று, மானே, தேனே பொன்மானே எல்லாம் வைத்து எழுத வேண்டும் என்று முடிவு செய்து யோசிக்க ஆரம்பித்தேன்.

`எல்லையிருக்குற மாதிரி தெரிஞ்சு எல்லையில்லாம இருக்குற வானம் அளவுக்கு அன்புவச்சிருக்க அண்ணனுக்கு…`

“ ம்ப்ச் வேண்டாம்…’’

`மனுசன் கால்கூட படாத இடத்தில கூட பரவியிருக்குற காத்து அளவுக்கு பேரன்போட இருக்குற அண்ணனுக்கு`

“ ம்ஹூம். இன்னும் ஆழமா?’’

“உயிரைப் போல அல்லது உயிர் அளவுக்குன்னு சினிமா டயலாக்லாம்!’’

“ ஸ்ஸ்ஸ். வரவே மாட்டேங்குதே.’’

காலையில இருந்து ஒரு வரியை கூட முடிக்காத என்னைப் பார்த்து சிரித்த என் மனசாட்சி,

`கண்ணை மூடி நீ என்ன சொல்ல நினைக்குறியோ, உனக்கு இந்த நிமிஷம் உங்கண்ணனைப் பத்தி என்ன தோணுதோ. அதை மட்டும் எழுதுன்’னு சொல்லிவிட்டது.

அண்ணன் தங்கை

கொஞ்சம் அமைதியாக, ஆழமாக யோசித்தேன். அண்ணனுக்கு எழுத வேண்டும் என்று எந்த நிகழ்வுகளையும் வார்த்தையிலே கோர்க்கவே முடியவில்லை. மனசும் மூளையும் நெகிழ்ந்து போய் என்னை எழுதவே விடவில்லை. கண்ணில் கண்ணீர்தான் முட்டியது. “ஒரே ஒரு வரி? அண்ணன்கிற வார்த்தையை தவிர ஒண்ணுமே எழுத முடியலையே’’ என்று அழுகைதான் வந்தது.

நிகழ்வுகளை யோசிக்க ஆரம்பித்தேன். எவ்வளவு தடவை முரண்டு பிடித்தாலும் ஒரே வார்தையிலேயே என்னை கட்டுப்படுத்துகிற அண்ணன். ஒவ்வொரு முறையும் என்னை இந்த உலகத்தை விஸ்தீரணமா பார்க்கச் சொல்லிக் கொடுக்கும் அண்ணன். எல்லா உறவுகளையும் அனுசரிக்க சொல்லிக் கொடுக்கும் அண்ணன். தப்பு செய்யும்போதெல்லாம் சட்டென்று ஒரு நிமிஷம் கோபப்படுகிற அண்ணன். இதைத் தான் செய்யணும் என்று சொல்லாமல், செஞ்சு பாரு என்று சொல்லி செய்ய வைக்கும் அண்ணன்.

அண்ணன் தங்கை

அவரைப் பற்றி எழுத முடியவில்லை என்ற வருத்தம். இரவும் வந்துவிட்டது. அந்த நிசப்தத்தில் வலிகள் இன்னும் ஆழமாகத் தெரிந்தது. அப்போது பக்கத்துக்கு வீட்டு ரேடியோ சத்தம் ஜன்னல் வழியாக கசிந்தது.

`பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால்.. அழுதால் கொஞ்சம் நிம்மதி, பேச மறந்து சிலையாய் நின்றால் அதுதான் தெய்வத்தின் சன்னதி’.

ஆமால்ல? சில உணர்வுகளை சொற்களால் சொல்லிவிட முடியாது இல்லையா?

ஒருவேளை உங்கள் அண்ணன் உங்கள் பக்கத்தில் இருந்தால் அவர்கள் கைகளை பிடித்து,

`என்னோட தைரியம் நீங்கதான்..’ என்று சொல்லுங்கள். அதைவிட இந்த உலகத்தில் ஒரு அபூர்வமான ரக்‌ஷா பந்தன் கிஃப்ட் எதுவுமில்லை. அந்த உணர்வு கொடுக்கும் பந்தத்தை, பாதுகாப்பை மிஞ்சிட இந்த உலகத்தில் எதுவுமில்லை. அண்ணண் என்றாலே அன்புதான். தமையன்களைத் தூரத்தில் வைத்திருக்கும் ஒவ்வொரு தங்கைக்கும், தங்கையை, மகளைப் போல நேசிக்கும் ஒவ்வொரு தனையனுக்கும் இது சமர்ப்பணம்.

மனோ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.