இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இர்பான் பதான் ‘‘இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் கங்குலி தான்’ என தெரிவித்துள்ளார்.
அண்மையில் கிரிக்கெட்.காம் என்ற வலைத்தளத்திற்கு பேட்டி கொடுத்த அவரிடம் ‘இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் யார்?’ என கேட்டதற்கு ‘கங்குலி’ என தெவித்துள்ளார் பதான்.
கங்குலி கேப்டனாக இருந்த சமயத்தில் இந்திய அணியில் அனுபவ வீரர்களும், இளம் வீரர்களும் சரியான கலவையில் இடம்பிடிப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது தலைமையில் இந்தியா பல வெற்றிகளையும் குவித்துள்ளது.
‘அணிக்குள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க அதிகம் விரும்புவார். குறிப்பாக ஆரம்பக்கட்டத்தில் இளம் வீரர்கள் சரியாக விளையாட சிரமப்பட்டாலும் அவர்களை ஆதரித்து வாய்ப்புகளை கொடுக்கின்ற மனம் கொண்டவர் கங்குலி. அப்படி அவர் யுவராஜ் சிங்கை ஆதரித்து வாய்ப்பு கொடுத்தார். பின்னாளில் யுவராஜ் இந்தியாவுக்காக பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார். இது போல பல இளம் வீரர்களை கங்குலி ஆதரித்து, இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களாகவும் உருவாக்கியுள்ளார். அதனால் தான் கங்குலியை சிறந்த கேப்டன் என்கிறேன்’ என பதான் விளக்கம் கொடுத்துள்ளார்.
சேவாக், கைஃப், ஹர்பஜன், தோனி மாதிரியான வீரர்கள் கங்குலி கேப்டனாக இருந்த போது தான் இந்தியாவுக்காக விளையாட அறிமுக வீரர்களாக களம் கண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM