பெண் பயணியுடன் காரைக் கடத்திச் செல்ல முயன்ற கடத்தல்காரரை காவல்துறையினர் இரண்டு மணி நேரம் சேஸிங் செய்து பிடித்துள்ளச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த கார் ஓட்டுனரான அகமத் என்பவர் கடந்த புதன்கிழமை உடல்நலமில்லாத ஒரு பெண் பயணியை ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். டெல்லியின் வடக்குப் பகுதியில் உள்ள காந்தி விகார் எரிப்பொருள் நிலையத்தின் அருகே வாகனத்தை நிறுத்திய அகமது பயணிக்காக நீர் வாங்க காரை விட்டு இறங்கியதாகச் சொல்லப்படுகிறது.

image

அப்போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் அகமதைத் தாக்கிவிட்டு பயணியுடன் காரைக் கடத்திச் சென்றுள்ளார். கடத்தல்காரரை பார்த்த பெண் பயணி அலறினார். இதனையடுத்து அகமத், அங்கு சாலைப் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களான பவன் மற்று அனில் ஆகியோரிடம் நடந்ததைக் கூறி கடத்தல்காரர், புராரிப் பகுதியை நோக்கி தப்பிச் சென்றதாகக் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து வஜிராபாத் போலீசார், கடத்தப்பட்டக் காரை சேஸ் செய்தனர். இதனைத்தொடர்ந்து இந்த தகவலானது தீர்பூர் சாலை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இருவரும் கடத்தல் காரை சேஸ் செய்தனர். கிட்டத்தட்ட 2 மணி சேஸிங்கிற்கு பிறகு கடத்தப்பட்ட காரை காவலர்கள் மடக்கிப் பிடித்தனர். காவலர்கள் தன்னை மடக்கியதாக உணர்ந்த கடத்தல்காரர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.

image

ஆனால் காவல்துறையினர் அவரை கைது செயதனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது 28 வயதான பிராந்த் சர்மா என்பதும் அவர் டெல்லி மகேந்திரா பூங்கா பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.