லண்டனில், நான்கு குழந்தைகளுக்கு தாயான ரெபேக்கா டால்டன் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பல்வலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். பல் மருத்துவரைப் பார்த்து சிகிச்சை பெற்றால் குணமாகிவிடும் என சாதாரணமாக விட்டுவிட்டார். இந்த வருடம் மார்ச் மாதம் திடீரென மிகுந்த வலி ஏற்படவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பல்லில் இருந்த பாக்டீரியா தொற்று மூளைவரை பரவிவிட்டதாக அவருக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். மூளையில் ஏற்பட்டத் தொற்று இதயம் மற்றும் கல்லீரலைப் பாதித்துள்ளது. இதனால் அவருக்கு நடக்க முடியாமல் போனதுடன், ஞாபகமின்மையும் ஏற்பட்டது.

image

கொரோனா தொற்று இருந்தால் இவரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக கொரோனா சோதனையில் இவருக்கு நெகட்டிவ் என வரவே மருத்துவர்கள் சிகிச்சையை ஆரம்பித்தனர்.

ஐந்து மாத தொடர் சிகிச்சைக்குப் பிறகு அவருடைய உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டு குணமாக ஆரம்பித்தார். இதில் இரண்டு முறை மரணத்திற்கு அருகே சென்று பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளார். கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர் 30 கிலோ எடையை இழந்துவிட்டார். 35 வயதே ஆன ரெபேக்காவிற்கு தனியாக எதுவும் செய்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

image

இதேபோல் லண்டனில் இந்த வருட ஆரம்பத்தில் பல்லில் பாப்கார்ன் சிக்கிய இருவருக்கு தொற்று ஏற்பட்டு அது இதயம் வரை பரவி, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.