கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது, இடுக்கி அணை. குறவன் குறத்தி என இரு மலைகளையும் இணைத்துக் கட்டப்பட்டுள்ள இந்த அணையின் மொத்த உயரம் 839 அடி. ஆசியாவின் மிகப்பெரிய இரண்டாவது வளைவு அணை என்ற பெருமை இடுக்கி அணைக்கு உண்டு. கடந்த சில மாதங்களாக, இடுக்கி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால், நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள கற்கள், பாறைகள், மணல் மேடுகள் போன்றவை வெளியே தெரிந்தன.

இடுக்கி அணை

Also Read: `மதுரை பேரையூரில் கிடைத்த தொல்லியல் எச்சங்கள்!’- ஆச்சர்யம் தரும் வரலாற்றுத் தகவல்கள்

இந்நிலையில், அப்பகுதியில் கேரள தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில், சுமார் 3,000 ஆண்டு பழைமையான கல் நினைவுச் சின்னம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அருகில், முதுமக்கள் தாழி மற்றும் சில பழங்காலப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மண்ணில் புதைந்து காணப்படும் கல் நினைவுச் சின்னங்கள்

Also Read: மதுரை: கண்மாயில் கண்டெடுக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழைமையான சதி கற்கள்!

இது தொடர்பாக பேசிய தொல்லியல் துறையினர், “மிகவும் பழைமையான கல் நினைவுச் சின்னம் இது. மனிதர்களை புதைக்கும்போது இப்படியான கல் நினைவுச் சின்னம் வைப்பது வழக்கமான ஒன்றுதான். அதுவும், இந்த மலைப்பகுதியில் வசித்த பழங்கால மனிதர்களின் நினைவுச் சின்னம் இது என்பது கூடுதல் சுவாரஸ்யமான விசயம். மேலும், மக்கள் வசித்த இடமாக இது இருந்திருக்க வாய்ப்பில்லை. பல கல்நினைவுச் சின்னம் இங்கே இருப்பதால், இது மனிதர்களை புதைக்கப் பயன்படுத்திய இடமாக இருக்கலாம். அவை மண்ணில் புதைந்துள்ளது. இடுக்கி அணையில் தண்ணீர் அதிகமானால், இந்த இடம் முழுவதும் தண்ணீரில் மூழ்கிவிடும். அதனால், விரைவில் இந்த இடத்தில் முழுமையான ஆய்வு செய்ய திட்டமிட்டப்பட்டுள்ளது” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.