குஜராத்தின் கிர் வனப்பகுதியில் இரு சிங்கங்களுக்கிடையே நடந்த சண்டை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்டு வருகிறது. மானை வேட்டையாடும் சிங்கம்… காட்டெருமையை வேட்டையாடும் சிங்கம் என சிங்கத்தின் பாய்ச்சல்களையும் சண்டைகளையும் வேறு விலங்குகளுடன்தான் இதுவரைப் பார்த்திருக்கிறோம். ஆனால், சிங்கம் சிங்கத்துடன் மோதும் இந்த வீடியோ புதிதானது. அரசியல்வாதியும் வனவிலங்கு புகைப்படக் கலைஞருமான ஜூபின் ஆஷாரா படமாக்கிய இந்த வீடியோவில் சுற்றுலாப் பயணிகளும் மூன்று ஜீப்களில் இருந்துகொண்டு மண் சாலையின் நடுவே திகிலுடன் இந்த சண்டையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 image

வைல்ட் இந்தியா என்று அழைக்கப்படும் வனவிலங்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு பிரபலமான பக்கத்தில் இந்த சிங்கங்களின் கிளிப் ட்விட்டரில் பகிரப்பட்டது. 22 வினாடி கிளிப்பில், சிங்கமும் சிங்கமும் ஆக்ரோஷமாக கர்ஜித்து சண்டையிடுவதைப் பார்க்கலாம்.  ஒரு சிறிய சிங்கம் பெரிய சிங்கத்தின் முகத்தின் குறுக்கே தனது பாதத்தால் அடிக்கச் செல்கிறது. குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்கா சிங்கங்களுக்கு ஆசியாவிலேயே புகழ்பெற்றது.

 https://twitter.com/WildIndia1/status/1287282224891494402

குஜராத் அரசு வெளியிட்டுள்ள தகவல்களின்படி தற்போது, கிர் காட்டில் 674 ஆசிய சிங்கங்கள் வாழ்ந்து வருகின்றன. இதன் கணக்கெடுப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக  கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்டபோது  523 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்க தற்போது 674 ஆக உயர்ந்துள்ளது.

 

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.