தென்காசி அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மின்வேலியை தாண்டிக் குதித்து அத்துமீறி நுழைந்து குளியல் போட்ட 6 பேருக்கு ரூ.60,000 அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை. 

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ராமநதி அணை அமைந்துள்ளது. இந்த அணைப் பகுதிக்கு மேலே உள்ள பகுதி களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணலாயத்துக்கு உள்பட்ட பகுதி என்பதால், இங்கு சோலார் மின் வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியான இங்கு நேற்று சில நபர்கள், ஆற்றுப் பகுதி வழியாக சென்று மின்வேலியின் அடியினுள் புகுந்து அத்துமீறி நுழைந்து குளிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம் உத்தரவின்படி ராமநதி வனப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

இதில் ராஜப்பநாடானூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த், அலெக்ஸ் பாண்டியன், அருண்குமார், ராஜன், ராஜா, ரஞ்சித் ஆகிய 6 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அனைவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அம்பாசமுத்திரம் வனக் கோட்ட துணை இயக்குனர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் ஆறு பேருக்கும் மொத்தம் ரூபாய் 60,000 அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.