கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் விளையாட்டு போட்டிகளுக்கெல்லாம் பொது விடுமுறை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிலிருந்து மெல்ல மீண்டு வருகிறது விளையாட்டுத் துறை. கால்பந்து, கிரிக்கெட், கார் பந்தயம் என சர்வதேச அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டின் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக பார்வையாளர்களின் வருகையின்றி நடைபெற்ற போட்டியாக அமைந்தது அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருந்த கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சுமார் 117 நாட்களுக்கு பிறகு நடைபெற்ற முதல் சர்வதேச போட்டியாக அமைந்தது. 

image

போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் இரு அணி வீரர்களும் கருப்பு நிற கையுறையை கையில் அணிந்து கொண்டு, ஒரு காலில் மண்டியிட்ட படி இன வெறிக்கு எதிராக தங்கள் கருத்தை பதிவு செய்தனர். அதோடு அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கும் அஞ்சலி செலுத்தினர். 

கருப்பின மக்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை பதிவு செய்தார் இந்த போட்டியில் வர்ணனையாளராக இயங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் மைக்கல் ஹோல்டிங். அதை காட்சி ஊடகத்தின் வழியாக உலக மக்களிடம் கொண்டு சென்றது ஸ்கை ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் நிறுவனம்.

image 

டாஸை வென்ற இங்கிலாந்து பேட்டை கையிலெடுக்க வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் அட்டாக்கிங் யுக்தியை பின்பற்றி 67 ஓவர்கள் பந்து வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அவுட் செய்து, முதல் இன்னிங்ஸில் 114 ரன்கள் முன்னிலை எடுத்தனர். அதற்கு பதிலடி கொடுக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் சரண்டராக ‘அண்டர்டாக்ஸ்’ என சொல்லப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதித்தனர்.

image

“இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ இயக்கமும் ஒரு காரணம்” என தெரிவித்தனர் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள். அடுத்த டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாக உள்ளது. 

இதனை கிரிக்கெட் பிரியர்கள் டிவியில் கண்டுகளிக்க முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் கருத்துகளையும் சமூக  வலைத்தளங்களில் பimageகிர்ந்துள்ளனர். அவற்றில் சில…

#சங்கக்கரா : ‘கொரோனா அச்சத்தை பின்னுக்கு தள்ளி கிரிக்கெட்டை மீட்டெடுக்க பெரிதும் இந்த போட்டி கைகொடுத்துள்ளது’ 

#விராட் கோலி : ‘டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த ஆட்டங்களில் ஒன்று இது. வெஸ்ட் இண்டீஸ் அணியினருக்கு வாழ்த்துகள்’ 

#பிரையன் லாரா : ‘மிகச் சிறந்த டெஸ்ட் வெற்றி. வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு வாழ்த்துகள்’

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.