திருச்சி மாநகரில் பொதுமக்களிடம் நல்லுறவு பேணாத  25 காவலர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார்.

image

திருச்சி மாநகர காவல் ஆயுதப்படை வளாகத்தில் ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் மின்னொளி கைப்பந்து மைதானம், மின்னொளியில் கடற்கரை கைப்பந்து மைதானம் உள்ளிட்டவைகளை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும்,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதியும் திறந்து வைத்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மத்திய மண்டல ஐஜி ,மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இது மட்டுமன்றி திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் 14 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள  விழிப்புணர்வு சிலைகளையும் அவர்கள் திறந்து வைத்தனர். மேலும் திருச்சி மாநகர காவல் ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் துப்பாக்கி சுடும் மையத்தையும் ஆய்வு நடத்தினர். 

image

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன்  “திருச்சி மாநகரில் பொதுமக்களிடம் நல்லுறவு பேணாத 25 பேரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்வது குறித்து ஆலோசனை வழங்கப்படும். திருச்சி மாநகரில் உள்ள 65 வார்டுகளில் மாநகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை இணைந்து பத்து பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 65 வார்டுகளிலும் கோரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளதாக குறிப்பிட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.