இந்திய – சீன எல்லையிலிருந்த ராணுவ வீரர்கள் மோதலுக்குப் பிறகு இருநாடுகளுக்குமிடையேயான எல்லைப் பிரச்னை பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய ராணுவம் – சீன ராணுவம் இடையேயான மோதலில் தமிழக வீரர் பழனி உள்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

Border dispute

சீன ராணுவத்திலும் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ராணுவ வீரர்களின் மோதலுக்குப் பிறகு எல்லைப் பகுதியில் போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.

இரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்த நிலையில், நாட்டு மக்களின் மனநிலையிலும் இந்தப் பதற்றம் பற்றிக்கொண்டிருக்கிறது. `சீனப் பொருள்களைப் பயன்படுத்துவதை இந்தியர்கள் நாம் தவிர்க்க வேண்டும்’ என்று நெட்டிசன்கள் பலர் குரல் எழுப்பி வருகின்றனர். குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு சிலர் இன்னும் கூடுதலாகப் போய், தங்கள் வீடுகளிலிருந்த விலை உயர்ந்த டி.விக்களை தெருவில் போட்டு உடைத்துள்ளனர்

Indian Border

இன்னொரு பக்கம், ‘எந்தப் பிரச்னைக்கும் போர் தீர்வல்ல. அதில் ஏற்படக்கூடிய ராணுவ வீரர்களின் உயிரிழப்புகள் இருநாடுகளுக்குமே துன்பகரமானவையாகவே இருக்கும். எனவே, பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண முற்பட வேண்டும்’ என்று அமைதியை விரும்புபவர்களின் குரல்களையும் கேட்க முடிகிறது.

ஒரு நாட்டில் போர் என்றால், தங்கள் நாடு போரில் ஈடுபடுவது குறித்து, அந்நாட்டு மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது கவனம் கொடுத்துப் பார்க்கப்பட வேண்டிய விஷயம். ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்குப் பிறகு பெரும் விவாதமாக மாறியுள்ள இந்திய – சீன எல்லைப் பிரச்னை குறித்து, உங்களுக்கு ஒரு கேள்வி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.