(கோப்பு புகைப்படம்)

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த தந்தையை புதைக்க யாரும் முன்வராததால் மகனே தந்தையை புதைத்த சம்பவம் நொய்டாவில் நடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தனது கோரத் தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. இந்தியாவும் தற்போது கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த தந்தையை புதைக்க யாரும் முன்வராததால் மகனே தந்தையை புதைத்த சம்பவம் நொய்டாவில் நடந்துள்ளது.

image

(கோப்பு புகைப்படம்)

நொய்டாவில் வசித்து வரும் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால் அரசு மருத்துவமனை உட்பட 3 மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதனையடுத்து அவர் கடந்த 8 ஆம் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாளே அவர் இறந்தார். இறந்த உடலை அவரது மகனிடம் ஒப்படைத்த மருத்துவ நிர்வாகம் அது குறித்த எந்த விளக்கமும் அளிக்காமல் அவரை அனுப்பியுள்ளது. இதனையடுத்து வேறு வழியில்லாமல் அவரே கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி தந்தையை அடக்கம் செய்துள்ளார்.

கொரோனா பிடியில் இந்தியா: 3 லட்சத்தை தாண்டிய பாதிப்பு!

image

இது குறித்து அவர் கூறும் போது “ சரியாக எனது தந்தை இரவு 12.45 மணிக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளார். ஆனால் அடுத்த நாள் காலை 6.30 மணிக்கே அவர் இறந்து விட்டார். ஒருவர் கூட நான் அப்போது என்ன செய்ய வேண்டும் என்று கூற வில்லை. உதவுவதற்கும் யாரும் முன்வரவில்லை. அவர் இறந்து 11 மணி நேரம் கழித்துதான் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததாக மருத்துவர்கள் கூறினர்.7.30 மணிக்கு என்னிடம் எனது தந்தையின் உடலை கவரில் கட்டி தந்தனர். தன்னந் தனியாக தந்தையின் சடலத்துடன் நின்று கொண்டிருந்தேன். எனது மனைவிதான் எனக்கு பாதுகாப்பு உபகரணங்களை வாங்கித் தந்தார். அதன் பின்னர் ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உதவியுடன் நான் எனது தந்தையை சுடுகாட்டில் சென்று அடக்கம் செய்தேன் என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.