தினந்தோறும் அழகாக, ஃபிரெஷ்ஷாக, ஆரோக்கியமாக இருக்க நம் எல்லோருக்குமே பிடிக்கும்தானே..? அதற்கு சில விஷயங்களை வாரத்தின் ஏழு நாள்களும் கண்டிப்பாக ஃபாலோ செய்ய வேண்டும். அவை என்னென்ன..? சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் ப்ரீத்தி.

அழகுக்கலை நிபுணர் ப்ரீத்தி

* காலையில் எழுந்தவுடன் வெறும் தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவ வேண்டும். இதற்கு ஜில்லென்ற குளிர்ந்த நீரோ அல்லது சுடு தண்ணீரோ வேண்டாம். வழக்கமான குழாய்த்தண்ணீரே போதுமானது. இதேபோல், உள்ளங்கைகளைக் குவித்து நீரைப் பிடித்து, அதற்குள் உங்கள் கண்களைத் திறந்து திறந்து மூடுங்கள். இப்படிச் செய்வதால் முகத்திலும் கண்களிலும் ரத்த ஓட்டம் அதிகரித்து, நாள் முழுக்க ஃபிரெஷ்ஷாக உணர்வீர்கள்.

* நன்கு வியர்க்கும்படி உடற்பயிற்சி, யோகா அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் இருக்கிற கழிவுகள் வியர்வை வழியாக வெளியேறும்.

exercise

* உடலில் கழுத்துப்பகுதியில்தான் சீக்கிரம் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். அதனால், கழுத்துக்கான பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு தினமும் செய்து வந்தால், கழுத்தில் சுருக்கங்கள் வருவது தள்ளிப்போடப்படும். வயதானது போன்ற லுக்கை ஏற்படுத்துகிற டபுள் சின் பிரச்னையும் குறையும்.

* வெந்நீரில் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குடிக்கும்போது உடலில் இருக்கிற கழிவுகள் வெளியேறி புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.

lemon with honey

* காலையில் குளிப்பதற்கு முன்னால் உங்கள் சருமத்துக்கு ஏற்ற க்ளென்சிங், டோனிங், மாய்ஸ்ச்சரைஸிங் கட்டாயம் செய்ய வேண்டும். இதற்கு நேரமில்லை என்பவர்கள் பாலேட்டால் முகத்துக்கு மசாஜ் செய்யுங்கள். எண்ணெய்ப்பசை சருமம் என்றால், சோற்றுக்கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள்.

* அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் பாதாம் மிக மிக அவசியம். அப்படியே சாப்பிட்டால் செரிமானப் பிரச்னைகள் வரலாம் என்பதால், முதல் நாள் இரவே பாதாம் பருப்பை ஊறவைத்து, காலையில் தோலை உரித்துவிட்டுச் சாப்பிடலாம். ஒரு நாளுக்கு 4 அல்லது 5 பாதாம் போதும்.

nuts and dry fruits

Also Read: பேருந்துப் பயணங்கள், உணவக மேசைகள்… கொரோனாவோடு வாழ மருத்துவர் அறிவுரைகள்! #LiveWithCoronaGuide

* காலையில் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவதற்கு முன் உலர்ந்த பழங்கள் அல்லது ஃபிரெஷ் பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். உலர் பழங்கள் ஒரு கைப்பிடியளவு போதுமானது. ஃபிரெஷ்ஷான பழங்கள் என்றால் ஒரு கப் அளவுக்குச் சாப்பிடலாம். கொரோனா தொற்று பயம் இருக்கிற இந்த நேரத்தில் பழங்களின் தோலை நீக்கிவிட்டே சாப்பிடுங்கள். பிறகு முக்கால் மணி நேரம் கழித்து காலை உணவு எடுத்துக்கொள்ளலாம்.

* காலையில் உலர் பழங்கள், ஃபிரெஷ் பழங்கள் சாப்பிட முடியாதவர்கள் ஒரு தக்காளி, கால் துண்டு பீட்ரூட், ஒரு கேரட், சின்னத்துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து ஜூஸாகக் குடிக்கலாம். ஆரோக்கியத்துடன் சரும அழகும் அதிகரிக்கும்.

juice

Also Read: சலூன், பார்லர் செல்லும்போது எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்? #LiveWithCoronaGuide

* வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது தவறாமல், உங்கள் சருமத்துக்கு ஏற்ற, காலநிலைக்கு ஏற்ற சன்ஸ்க்ரீனை முகத்தில் அப்ளை செய்யவும்.

* கடைசி பாயின்ட், ஆனால் மிக மிக முக்கியமான பாயின்ட். தாகம் எடுக்கும்போதெல்லாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏசி ரூமில் இருப்பவர்களுக்கு தாகம் எடுக்காமல் போகலாம் என்பதால் இதில் கூடுதல் கவனம் தேவை. ஒரு நாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டு அருந்துங்கள். காலையிலேயே பாட்டிலில் பிடித்துவைத்துவிட்டு இரவுக்குள் அருந்தும் வழக்கத்தையும் கடைப்பிடிக்கலாம். உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு இருந்தால்தான் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்கும். தவிர, உடலில் இருக்கிற கழிவுகளும் முழுமையாக வெளியேறும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.