இந்திய மக்கள் உண்மையை அறிவார்கள் எனப் பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் துறவிகள் உள்ளிட்ட மூவர், கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ரிபப்ளிக் தொலைக்காட்சியில் விவாதம் ஒன்று நடைபெற்றது. அதில், இந்த கும்பல் கொலையைக் கண்டித்து ஏன் சோனியா காந்தி இன்னும் கருத்து தெரிவிக்காமல் மௌனம் காக்கிறார் என்று கேள்வியெழுப்பினார் ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப். மேலும், சோனியா காந்தி மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகத் தெரிகிறது.

image

இதனையடுத்து சோனியா காந்தி மீது அவதூறு பரப்பும் விதமாகப் பேசியதாக அர்னாப் கோஸ்வாமி மீது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், தெலங்கானா, ஜம்மு காஷ்மீர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் மும்பை போலீசார் முன்பு நாளை விசாரணைக்கு ஆஜராகிறார் அர்னாப்.

image

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ”மும்பை போலீசார் நாளை என்னை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ரிபப்ளிக் டிவி பால்கர் மாவட்டத்தில் நடந்த உண்மையை வெளிக்கொண்டு வந்தது. ஆனால் எங்களது தகவல்கள் சோனியா-சேனா அரசையும், வத்ரா – காங்கிரசையும் காயப்படுத்தியுள்ளன. நாளை நான் மறுபடி காவல் நிலையம் செல்லவுள்ளேன். இந்திய மக்கள் உண்மையை அறிவார்கள். அவர்கள் என்னுடனும், ரிபப்ளிக் தொலைக்காட்சியுடனும் இருக்கிறார்கள்.உண்மை என்னுடன் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்

”வேடந்தாங்கல் சரணாலயத்தில் சுற்றளவு குறைக்கப்படவில்லை” – வனத்துறை விளக்கம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.