சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் தொடர்ந்து பல நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறது. கடந்த மாதம் ஜியோ நிறுவனத்தின் 10 சதவிகிதப் பங்குகளை ஃபேஸ்புக் வாங்கியது அனைவருக்கும் நினைவிருக்கும். அந்த ஒப்பந்தத்தின் மூலம் வேகமாக வளர்ந்து வரும் இந்தியச் சந்தையில் இன்னும் அழுத்தமாக கால்பதிக்கும் வேலைகளைத் தொடங்கியது ஃபேஸ்புக்.

ஃபேஸ்புக்

இந்த நிலையில், நேற்று GIF-களைப் பகிரும் அமெரிக்க நிறுவனமான giphy-யை 400 பில்லியன் டாலர் விலைக்கு (இந்திய மதிப்பில் சுமார் 3,035 கோடி ரூபாய்) ஃபேஸ்புக் வாங்கியுள்ளது. இதன்மூலம் ஃபேஸ்புக் தனது இன்ஸ்டாகிராம் சேவையில் இந்த Gif வசதியை இணைக்க உள்ளதாகவும், Giphy நிறுவனம் ஒரு பங்குதாரராகத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் உடன் இணைந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது gify-யின் 50% பயன்பாடு ஃபேஸ்புக் நிறுவ‌ன‌த்தின் வாட்ஸ்அப், FB மெசேன்ஜர் செயலிகளில் மூலமாகத்தான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஃபேஸ்புக் – ஜியோ கூட்டணி… இந்தியாவில் ‘சூப்பர் ஆப்’ ஆகுமா வாட்ஸ்அப்?! #LongRead

ஆப்பிள், ட்விட்டர் மற்றும் இதர நிறுவனங்களும் அதன் செயலிகளில் இந்த Gif வசதியை அதன் பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது இந்த நிறுவனம் ஃபேஸ்புக் வசம் உள்ளதால், இந்த நிறுவனங்கள் தொடர்ந்து இந்த Gif வசதியைப் பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த இன்ஸ்டாகிராமின் துணைத் தலைவர் விஷால் ஷா, “Giphy-யின் செயல்பாடு மற்ற எல்லா நிறுவனங்களுக்கும் தொடரும். தற்போது இருப்பதைப் போலவே பயனர்கள் gif பதிவுகளை அப்லோட் செய்யலாம். மேலும், பல புதிய gif-களை எங்களுடன் இணைந்து gify உருவாக்கும்” என்றார்.

ஏற்கெனவே 2015-ம் ஆண்டு gify-யை வாங்க ஃபேஸ்புக் முயற்சி செய்தபோது gify மறுத்திருந்தது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.