குடியரசுத் தலைவர் விருதுகளுக்கான அறிவிப்பில் செம்மொழித் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா கடிதம் எழுதியுள்ளார்

 அந்த கடிதத்தில் ”மொழிகளுக்கு சிறந்த சேவையாற்றிய இளம் அறிஞர்கள் மற்றும் சிறந்த வல்லுனர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்குவது தொடர்பான அறிவிப்பு கடந்த 9ஆம் தேதி வெளியிடப்பட்டது.

image

அந்த அறிவிப்பில் சமஸ்கிருதம், பாலி. அரபி, பாரசீகம். கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. செம்மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது அநீதி. சிறந்த இலக்கியம் மற்றும் இலக்கண வளம் வாய்ந்த தமிழ் பல உலக நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் விருதுக்கான அறிவிப்பில் தமிழை புறக்கணிப்பது பாரபட்சமானது என்றும் தெரிவித்துள்ளார்

சாலையில் அடிப்பட்டுக் கிடந்த தொழிலாளி – 12 மணிநேரத்திற்குப் பின் மீட்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.