கைலாஷ் – மானசரோவர் யாத்திரை நேரத்தைக் குறைக்கும் 80 கிலோ மீட்டர் நீளம் கொண்ட புதிய சாலையைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

இந்தச் சாலை கட்டியா பாகரில் தொடங்கி கைலாஷ்-மானசரோவர் நுழைவாயிலான லிப்புலேக் பாஸ்ஸில் முடிகிறது. இந்த 80 கிலோ மீட்டர் நீளச் சாலையின் உயரமானது 6,000 அடியிலிருந்து 17,060 அடி வரை அதிகரிக்கிறது. இந்தச் சாலைத் திட்டம் நிறைவடைந்ததால் செங்குத்தான மலைப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய ஆபத்தான பயணத்தை கைலாஷ்-மானசரோவர் யாத்திரை பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் தவிர்த்து விடலாம். தற்சமயம் கைலாஷ்-மானசரோவருக்கான பயணம் சிக்கிம் அல்லது நேபாள வழித்தடத்தில் மேற்கொள்ள இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை ஆகும். லிப்புலேக் வழித்தடம் 90 கி.மீ அதிக உயரம் கொண்ட மலையுச்சி ஏறும் பயணமாக இருந்ததால் வயதான யாத்திரிகர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி வந்தனர்.

image

காணொளி காட்சி மூலம் மூலம் இந்தச் சாலையைத் தொடங்கி வைத்த ராஜ்நாத் சிங் இதன் சிறப்பு குறித்தும் பேசினார் ” இந்த முக்கியமான சாலை இணைப்பு வேலை நிறைவடைந்ததால் உள்ளூர் மக்கள் மற்றும் யாத்திரிகர்களின் பல ஆண்டுக் கால கனவுகள் நிறைவேறியுள்ளன. இந்தச் சாலைவழி போக்குவரத்து தொடங்கி உள்ளதால் இந்தப் பிராந்தியத்தின் உள்ளூர் வர்த்தகமும் பொருளாதார வளர்ச்சியும் ஊக்கம் பெறும் என்று தான் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். கைலாஷ்-மானசரோவர் யாத்திரையானது புனிதமான யாத்திரை என்பதையும் இந்துக்கள், புத்த மதத்தினர் மற்றும் ஜைனர்கள் இந்த யாத்திரைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்” என்றார்.

image

மேலும் தொடர்ந்த அவர் ” முன்பெல்லாம் கைலாஷ் – மானசரோவர் பயணத்தை நிறைவேற்ற 2-3 வாரக் காலம் ஆகும். இப்போது இந்தச் சாலை இணைப்பினால் இனி ஒரு வாரக் காலத்தில் யாத்திரையானது நிறைவு பெறும். சிக்கிம் மற்றும் நேபாளம் ஊடாகச் செல்லும் மற்ற இரண்டு சாலைவழிகளும் நீண்ட தொலைவு கொண்டவை ஆகும். இந்தப்பயணம் தோராயமாக 20 சதவிகிதம் இந்தியச் சாலைவழிப் பயணமாகவும் 80 சதவிகிதம் சீன நிலப்பரப்புப் பயணமாகவும் இருக்கும். கட்டியா பாகர் – லிப்புலேக் சாலை தொடங்கப்பட்டதால், இந்தப் பயண விகிதமானது தலைகீழாக மாற்றியுள்ளது” என்றார் ராஜ்நாத் சிங்.

இந்தத் திட்டம் குறித்து மேலும் விரிவாகப் பேசிய அவர் ” இனிமேல் மானசரோவர் யாத்திரிகர்கள் இந்தியச் சாலைகளில் 84 சதவிகிதம் சாலைவழிப் பயணமும் வெறும் 16 சதவிகித தூரம் மட்டுமே சீன நிலப்பரப்பிலும் பயணம் மேற்கொள்ள வேண்டும். இது ஒரு வரலாற்றுச் சாதனை. இந்தச் சாதனையை நிறைவேற்றிய எல்லைப்பகுதி சாலைகள் கழகப் பொறியாளர் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பை அளப்பரியது” எனப் பாராட்டிப் பேசியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.