ஜெர்மனி நாட்டில் சிக்கியுள்ள செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் விரைவில் இந்தியா திரும்புவார் என்று அவரது மனைவி அருணா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பண்டஸ்லீகா செஸ் தொடரில் பங்கேற்பதற்காகக் கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனி சென்றார் விஸ்வநாதன் ஆனந்த். பின்பு, உலகமெங்கும் பரவிய கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. பிப்ரவரி மாதம் இறுதியிலிருந்து கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் தீவிரமானது. இதனால் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பொது முடக்கம் அமலில் இருக்கிறது. ஆகவே விஸ்வநாதன் ஆனந்த் இந்தியா திரும்ப முடியாமல் இருக்கிறார்.

image

இது குறித்து “டைம்ஸ் நவ்” இணையதளத்திற்குப் பேட்டியளித்துள்ள அருணா “ஆனந்த் ஜெர்மனியில் இருக்கும் இந்தியத் தூதரகத்திடம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். ஆனால் எப்போது இந்தியாவிலிருந்து சிறப்பு விமானம் வரும் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. அங்கு மாட்டியுள்ள இந்தியர்களை மீட்பது என்பது சாதாரண விஷயமல்ல. அது ஒரு மிகப்பெரிய போராட்டம். அது விரைவில் நடக்கும் என நம்புகிறேன். அதற்காகக் காத்திருக்க வேண்டும். எனவே ஆனந்த் விரைவில் நாடு திரும்புவார் என நம்புகிறேன்” என்றார் அவர்.

image

சற்றே உணர்ச்சிவசப்பட்டவராகத் தொடர்ந்து பேசிய அருணா “ஆனந்த் இல்லாதது குடும்பத்துக்கு பெரும் சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனந்த் இல்லையென்று மகன் அகில்தான் மிகவும் வேதனைப்படுகிறான். இவர்கள் இருவரும் வீட்டில் இருக்கும்போது அவ்வளவு அருமையாக இருக்கும். ஆனந்த் வீடியோ கால் மூலம் அடிக்கடி பேசினாலும் அவர் அருகில் இருப்பதையே விரும்புகிறோம்” என்றார் அவர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.