இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. நாடு முழுவதும் இரண்டாம் கட்டம் ஊரடங்கு மே 3-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தளர்வுகள் இருக்குமா அல்லது நீட்டிக்கப்படுமா என பொதுமக்களு குழம்பி இருந்தவேளையில் தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கை இரண்டு வார காலத்துக்கு நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு

கொரோனா பாதிப்புள்ள பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்டலங்களாக பிரித்து மத்திய அரசு இன்று காலை அறிவிப்பு வெளியிட்டது. இதனடிப்படையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை. பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிவப்பு மண்டலம்

  • தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும்

  • முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளியே வரக்கூடாது.

  • 2 சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டும் பயணிக்கலாம்

  • பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

  • அத்தியாவசியம் அல்லாத சேவைகளுக்கு அனுமதி கிடையாது.

  • நகர பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயங்க அனுமதி

சிவப்பு மண்டலம்
  • அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் இயங்க அனுமதி

  • சுயதொழில் செய்வோரின் சேவைகளுக்கு அனுமதி

  • பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்களுக்கு தடை

  • சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ, கார் இயக்கத்தடை

  • 2 வாரங்களுக்கு சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை

  • இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் கட்டாயம் வெளியே வரக்கூடாது.

ஆரஞ்சு மண்டலம்

ஆரஞ்சு மண்டலம்
  • மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்

  • கார்களில் 2 பேர் மட்டும் பயணிக்க அனுமதி

  • இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி

  • 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடர அனுமதி

  • பள்ளிகள், கல்லூரிகள் அடுத்த 21 நாள்களுக்கு இயங்காது

  • அத்தியாவசியமற்ற பொருட்களுக்கும் இ-வணிகத்தில் அனுமதி.

பச்சை மண்டலம்

பச்சை மண்டலம்
  • சிவப்பு மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் கொடுக்கப்பட்ட அனுமதிகள் அனைத்தும் பச்சை மண்டலத்திலும் அனுமதிக்கப்படும். கூடுதலாக,

  • பச்சை மண்டலத்தில் 50 சதவிகித இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்க அனுமதி.

  • அத்தியாவசியமற்ற பொருட்களுக்கும் இ-வணிகத்தில் அனுமதி

  • மதுக்கடைகள், பீடா கடைகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்படாதவை

Also Read: `2011 உலகக்கோப்பை.. யுபிஎஸ்சி நேர்காணல்.. கொரோனா!’ -அஷ்வின், திருப்பூர் ஆட்சியரின் `லைவ்’ உரையாடல்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.