கொடைக்கானலில் கனவாகிப்போன ஏப்ரல் மற்றும் மே பருவ கால சுற்றுலாவால் சுமார் 400 கோடி ரூபாய் அளவிற்கு சுற்றுலா தொழில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

உலகப் புகழ்பெற்ற மலைகளின் இளவரசி கொடைக்கானலில் மே மாதம் நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற மலர்க் கண்காட்சி மற்றும் 20 நாட்கள் நடைபெறும் கோடை விழா ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது. 2019-ஆம் ஆண்டு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடைபெறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் 400 கோடி ரூபாய் சுற்றுலா வருவாய் வந்துள்ளதாக சுற்றுலாத் துறையின் புள்ளி விபரம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அவை அனைத்தும் இழப்பை சந்தித்துள்ளதாக சுற்றுலாத்துறை தகவல் அளித்துள்ளது.

image

காவலர்களுடன் வாக்குவாதம் -தடுப்பு வேலிகளை தலையால் முட்டி தள்ளிய இளைஞர்

முடங்கிய ஏப்ரல் மே மாத சுற்றுலா வருவாய்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு கடந்த 2019 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் 5 லட்சம் பேர் மலைப்பகுதிக்குள் நுழைந்து படகு குழாம், மோயர் சதுக்கம், குணா குகை, தூண் பாறை, கோக்கர்ஸ் நடைபகுதி, பிரயண்ட் பூங்கா மற்றும் செட்டியார் பூங்காவை கட்டணம் செலுத்தி சுற்றிப்எபார்த்துள்ளனர். மேலும் ஏரியில் உள்ள படகு குழாம்களில் படகு சவாரி செய்தும் அவர்கள் கொடைக்கானலில் சுற்றுலா தொழில் புரிவோருக்கும் அரசு சார்ந்த துறைகளுக்கும் வருவாய் ஏற்பட வழிவகை செய்துள்ளதாக கடந்த ஆண்டின் சுற்றுலாத்துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டும் அதே அளவிற்கு சுற்றுலா வருமானம் வரும் என்று எதிர்பார்ர்கப்பட்ட நிலையில், கொரோனா எனும் கொடிய நோய் தாக்கம் மொத்த சுற்றுலாவையும் முடக்கி போட்டுள்ளது.

image

மகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் தமிழக கலைஞர்கள் – மீட்க அரசுக்கு கோரிக்கை

அரசுத்துறை மற்றும் சுற்றுலா தொழில் முனைவோருக்கு 400 கோடி ரூபாய் வருவாய் இழப்பு

கடந்த ஆண்டு சுங்கச்சாவடி வருவாய், மோயர் சதுக்கம், தூண் பாறை, குணா குகை, பிரயண்ட் பூங்கா, கோக்கர்ஸ் நடைபகுதி, படகு குழாம் வருவாய் என அரசுக்கு மொத்தம் சுமார் 50 கோடி வரை வந்துள்ளதாகவும், இந்த ஆண்டு அவை அனைத்தும் இழப்பாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் அரசு சார்ந்த எதிர்கால சுற்றுலா மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு பெறுவதில் சிக்கல் நிலவும் எனவும் கூறப்படுகிறது. இவை தவிர 1500 க்கும் மேற்பட்ட விடுதிகளின் வருமானம் , 800 க்கும் மேற்பட்ட வாடகை வாகன ஓட்டிகள் வருமானம், 1500 க்கும் மேற்பட்ட சுற்றுலா தல சிறு கடைகள் வருமானம், குதிரை ஓட்டிகள் வருமானம், சுற்றுலா வழிகாட்டிகள் வருமானம் என, மொத்தமாக கடந்த ஆண்டு 350 கோடிக்கும் மேல் இருந்தது என்றும், இந்த ஆண்டு அவை அனைத்தும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

image

ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாத வருமானம் மட்டும், ஆண்டுன் மொத்த வருமானத்தில் 70 சதவிகிதமாக இருக்கும் என்றும், இந்த இரண்டு மாத வருமானத்தை நம்பி மட்டுமே, குடும்ப கடன்கள், பள்ளி கல்லூரி கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு நிதி தேவைக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திட்டமிடுவது வழக்கம். ஆனால் இந்த பொது முடக்கத்தால் நிதிச்சுமை ஏற்பட்டு அவர்கள் அனைவரது வாழ்க்கையும், எதிர்கால தேவைகளை சமாளிப்பதும் கேள்விக்குறியாக உள்ளதாக கூறுகின்றனர்.

மழைக்கால, குளிர்கால சுற்றுலா ஏற்படுத்த கோரிக்கை

image

எதிர்பாராத இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க, ஊரடங்கும் கொரோனா அச்சமும் முடிவுக்கு வந்தவுடன், இரண்டாவது சுற்றுலா பருவம் என்று புதிய சுற்றுலா பருவத்தை, அருவிகள் ஆர்ப்பரிக்கும் மழைக்காலத்திலும், அதனை தொடர்ந்து பனிமூட்டம் நிலவும் அழகிய குளிர்காலத்திலும் உருவாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.