தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு உணவு மற்றும் மருந்து வழங்குவதற்காகத் தஞ்சையில் செயல்படும் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று ரோபோ இயந்திரந்தை உருவாக்கியதுடன், அதை மருத்துவக்கல்லூரியின் பயன்பட்டுக்காகவும் வழங்கினர்.

ரோபோ

தொடக்கத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் இல்லாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. அதே போல் அறிகுறிகளிள் காணப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதுடன் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 55 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு முழு கவனத்துடன் டாக்டர்கள் சிகிச்சை கொடுத்து வருகின்றனர். மேலும், அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்து ஆகியவற்றை மருத்துவப் பணியாளர்கள் வழங்கி வருகின்றனர்.

மருத்துவக்கல்லூரிக்கு வழங்கபட்ட ரோபோ

இதனால் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்டவற்றை வழங்குவதற்காகத் தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் ரோபோ தயாரிக்கப்பட்டது. இந்த ரோபோ இயந்திரத்தை மருத்துவக் கல்லூரியின் பயன்பாட்டுக்காகப் பல்கலைக்கழகத்தின் சார்பில் மண்டல கொரோனா தடுப்புக் குழு அலுவலர் சண்முகம், கலெக்டர் கோவிந்தராவ், மருத்துவக்கல்லுாரி முதல்வர் குமுதா லிங்கராஜ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

இது குறித்து பல்கலைக்கழக துணை பதிவாளர் சுவாமிநாதன், “மருத்துவத்துறையில் பயன்படுத்துவதற்காக சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் சார்பில் ரோபோ தயாரிக்கப்பட்டது. மூன்று அடுக்குகளைக் கொண்ட வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ 25 கிலோ எடையிலான பொருள்களைக் சுமந்து செல்லும் திறனுடையது. ரிமோட் கருவி மூலம் 1 கி.மீ வரை இந்த ரோபோவை இயக்கலாம்.

ரோபோ

இதில் பொருத்தப்பட்டிருக்கும் மானிட்டர் மூலம், யார் யாருக்கு உணவு வழங்கப்படுகிறது என்பதை ரோபோவை இயக்குபவர் எளிதாக அறிந்து கொள்ளலாம். அத்துடன் ரோபோ மூலமாகவே சிகிச்சையிலிருப்பவர்களும் ரோபாவை இயக்குபவர்களும் பேசி கொள்கிற வசதியும் உள்ளது. முதல் கட்டமாக 20 ரோபோ இயந்திரங்கள் தயார் செய்யப்படுகின்றன. இதில், 5 ரோபோக்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு தற்போது ஒரு ரோபோவை கொடுத்துள்ளோம். மற்ற ரோபோ இயந்திரங்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு வழங்க இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.