ஊரடங்கு காலத்தில் வாடகை கொடுக்காததால் வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்து, குடிநீர் வழங்குவதை நிறுத்திய ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

image

 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட தலைநகரான தொடுபுழாவை அடுத்த முட்தலைக்கோட்டா பகுதியைச் சேர்ந்தவர் மாத்யூ (48). கூலித் தொழிலாளியான இவர், அங்குள்ள தாமஸ் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டில் மாத வாடகையாக ரூபாய் 1,500 கொடுத்துக் கடந்த 5 ஆண்டுகளாக வசித்துள்ளார். மாத்யூ மனைவி உடல்நல சரியில்லாதவர் எனச் சொல்லப்படுகிறது. இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். மாத்யூவின் வீடு நான்கு தகரங்களால் ஆன ஒரு கூடாராம் அவ்வளவுதான். அவ்வளவுதான் அதன் வசதி.

மாமியார்-மாமனாரைக் கொன்றதாக மருமகள் மீது புகார்? – சம்பவத்தின்போது வீட்டிலிருந்த கணவர்

image

 

 கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாத்யூ வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதனால் அரசு வழங்கிய அரிசியை வைத்து மாத்யூவின் குடும்பம் காலம் கழித்து வந்துள்ளது. மாத இறுதி நாட்களில், வீட்டின் உரிமையாளரான ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமஸ் வழக்கம் போல் வீட்டு வாடகையைக் கேட்டுள்ளார்.

image

 

சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் ! மறக்க முடியாத நினைவுகள்

 அதற்கு மாத்யூ ஊரடங்கால் வருமானமே இல்லை என்றும் வேலைக்குச் சென்ற பின் வீட்டு வாடகையைச் செலுத்தி விடுவதாகக் கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத வீட்டு உரிமையாளர் மாத்யூவை காலி செய்யக்கூறி வற்புறுத்தியுள்ளார். அத்துடன் வீட்டிற்குச் செல்லும் பாதையை அடைத்து, மின் இணைப்பையும் துண்டித்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவல் அப்பகுதி தன்னார்வலர்களுக்குத் தெரிய வர, இந்தப் புகார் காவல்நிலையத்திற்குச் சென்றது. இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் உரிமையாளர் தாமஸை கைது செய்ததோடு, மாத்யூவிற்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து தந்துள்ளனர்.

 

 image

இது குறித்து தாமஸ் கூறும்போது “ நான் இந்த வீட்டில் கடந்த ஐந்தாண்டுகளாக மாதம் 1,500 ரூபாய் வாடகை கொடுத்து வசித்து வருகிறேன். தற்போது பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வெளியே வேலை இல்லை. அதனால்தான் வாடகை கொடுக்க இயலவில்லை. ஆனால் அவரோ வீட்டுப் பாதையை அடைத்து விட்டார். வீட்டு உரிமையாளரின் மகன் ஜான், மின் இணைப்பைத் துண்டித்தது மட்டுமல்லாமல், கிணற்றிலிருந்து தண்ணீர் தரவும் மறுத்து விட்டார். இதனால் நாங்கள் செய்வதறியாது நின்றோம்.” என்றார். கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர், எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.