கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிக்காக மத்திய மாநில அரசுகளுக்கு நிதியுதவி செய்ய விரும்புவோர் தாராளமாக தரலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து பிரபலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு: களத்தில் இறங்கிய ...

“உன்கிட்ட பதில் சொல்ல முடியாது” – குடிபோதையில் பெண் போலீஸிடம் தகராறு செய்த அதிமுக பிரமுகர்

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் விஜய் ரூ. 1.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சமும் வழங்கியுள்ளார். திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு (ஃபெப்சி) 25 லட்சமும், கேரளாவுக்கு 10 லட்சம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரிக்கு தலா 5 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ ரசிகர் மன்றங்களுக்கும் நடிகர் விஜய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

ஏற்கெனவே நடிகர் அஜித் ரூ. 1.25 கோடி நிதியுதவி அளித்திருந்த நிலையில் நடிகர் விஜய் ரூ. 1.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.