மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

வரும் 27-ம் தேதி, மீண்டும் மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த மாதம் 20-ம் தேதி, முதன்முதலாக முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பிறகு, கடந்த 11-ம் தேதி இரண்டாவது முறையாக முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 27-ம் தேதி நடக்கும் ஆலோசனையில், ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து மாநில முதலமைச்சர்களிடம் ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,345 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,345 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 47,663 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அமெரிக்காவில் புதிதாக 29,991 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 8,48,735 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் 26.36 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,36,989 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,84,186 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேநேரம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,17,619 ஆக உயர்வு.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.