கோவையில் பிறந்து ஒருவாரமான குழந்தைக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 3 பேருக்கும், சிறுமுகையில் 2 பேருக்கும் புதிதாக நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், பிறந்து ஒரே வாரமான குழந்தையும் அடக்கம்.
கோவையில் ஏற்கெனவே 28 பேர் குணமடைந்த நிலையில், நேற்று 18 பேர் என மொத்தம் இன்று வரை 46 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று குணமடைந்த 18 பேரில் 4 பேர் திருப்பூரை சேர்ந்தவர்கள். 18 பேர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1 வார குழந்தையின் குழந்தையின் தாயுக்கு கொரோனா இருந்த நிலையில், தற்போது குழந்தைக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் ஈ.எஸ்.ஐ., மருத்துவமனையில் 85 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உடல் முழுவதும் காயத்துடன் சிறுவன் மரணம்..! – தகாத உறவால் கொடூரம்..?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM