ஊரடங்கு பணியின்போது காவலர் ஒருவர்  கையில்லாத குரங்கு ஒன்றிற்கு  வாழப்பழத் தோலை உரித்து மிக அழகாக ஊட்டிவிடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
 
நாட்டில் நிலவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி பல மக்கள் தவித்து வருகின்றனர். ஆகவே வாழ வழியின்றி பஞ்சம் பிழைக்கப் போன இடத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர். அப்படி அவர்கள் திரும்பும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்க்கும் நெஞ்சங்களை உறைய வைத்து வருகின்றன. இந்த ஊரடங்கால் உணவின்றி தவிப்பது மக்கள் மட்டுமல்ல; விலங்கினங்களும்தான். பொது இடங்களில் சுற்றித் திரியும் பறவைகள், நாய்கள், பசு மாடுகள், குரங்குகள் எனப் பல பிராணிகள் ஆகாரம் இன்றி அல்லல்பட்டு வருகின்றன. அதைக் கண்ட சில நல்ல மனம் படைத்தோர் அவற்றிற்கு ஆகாரமிட்டு உதவி வருகின்றனர். விளைச்சலை முறையாகக் கொண்டு போய் சந்தைப் படுத்த முடியாத பல விவசாயிகள் காட்டில் சுற்றித் திரியும் விலங்கினங்களுக்கு அவற்றைக் கொட்டிவிட்டு வேதனையோடு திரும்பி வருகின்றனர்.  
 
This Video Of A Police Officer Feeding Banana To An Amputee Monkey ...
 
இந்நிலையில், நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு சம்பவம் உத்திரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள இந்தநேரத்தில் தனது பணியை ஆற்றுவதற்காக ஒரு காவலர் உட்கார்ந்திருக்கிறார். அவரது அருகில் உணவுக்கு வழியின்றி தவிக்கும் கையில்லாத குரங்கு அமைதியாக உட்கார்ந்துள்ளது. அதன் பசியை அறிந்த அந்தக் காவலர் அதற்கு மிக அழகாக வாழைப்பழத்தின் தோலை உரித்து குழந்தைக்கு ஊட்டுவதைப் போல் ஊட்டுகிறார். அந்தக் குரங்கும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பழத்தை அன்பாக உண்ணுகிறது. இந்தக் காட்சியை யாரோ ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பல ஆயிரக்கணக்கான இதயங்களை ஈர்த்துள்ளது. 
 
இந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள குஸ்பூ சோனி, “இந்த அழகான வீடியோ சமூக ஊடகத்தில் 28,000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.  இது கிட்டத்தட்ட 2,000 முறை மறு ட்வீட் செய்யப்பட்டுள்ளது. கருத்துகள் பிரிவில்  பலரும் அந்தக் காவலரைப் பாராட்டியுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.