உத்தரபிரதேசத்த்தில் இருக்கும் வெளிமாநிலத்தவர்களுக்கும் ரேசன் பொருட்களை வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பிறகு சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹெலிஹாப்டரில் இருந்து ரூ.2000 நோட்டுகளை கொட்டுவார்களா? – வதந்தியை நம்பி காத்திருந்த மக்கள்

image

இந்நிலையில் உத்தரபிரதேச முதல்வர், மாநிலத்தில் உள்ள வெளிமாநிலத்தவர்கள் உட்பட அனைவருக்கும் ரேசன் பொருட்களையும், உணவையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த மரம் – ஆச்சரியத்தில் அசந்துபோன ஆராய்ச்சியாளர்கள்

image

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று மூத்த அதிகாரிகளுடன் உத்தர பிரதேச முதல்வர் ஆலோசனை நடத்தினர். பின்னர் பேசிய போது “ மக்களிடம் ரேசன் அட்டை இருக்கிறதா? ஆதார் அட்டை இருக்கிறதா  என்பதையெல்லாம் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு உணவு தேவைபடுகிறது என்றால் வழங்குங்கள். அவர்கள் வெளிமாநிலத்தவர்களாய் இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு ரேசன் மற்றும் உணவு பொருட்களை வழங்குங்கள் ” என்று உத்தரவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.