கொரோனா வைரஸ் பரவல் நீடித்துவரும் நிலையில், தொற்று குணமாவதில் நோய் எதிர்ப்புச் சக்தியின் பங்கு பேசுபொருளாகி இருக்கிறது. தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தி செயல்படுகிறது? நோய் எதிர்ப்புச் சக்தி மனிதர்களுக்கு அளிக்கும் பாதுகாப்பு என்ன?

1846 ல் உலகம் முழுவதும் தட்டம்மை பரவல் அதிகரித்திருந்தபோது ஸ்காட்லாந்துக்கும், ஐஸ்லாந்துக்கும் இடையே ஒருதீவுக்கு ஆராய்ச்சிக்காகத் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர் டேனிஷ் விஞ்ஞானி பீட்டர் பனும். உடலியல் மற்றும் நோயியல் குறித்த வல்லுநரான பீட்டர், அந்த தீவு வாசிகள் நோயிலிருந்து தற்காப்பு பெற்றது பற்றி நடத்திய ஆய்வு முக்கியத்துவம் பெற்றது. அவரது கண்டுபிடிப்பு தொற்றுநோய், நோயெதிர்ப்பு குறித்த விஞ்ஞானத்தை மேம்படுத்தியது. அதிலிருந்து ஒவ்வொரு நோயும் பாதிக்கும் விதம், பரவும் விதம் பற்றி விஞ்ஞானிகள் ஒரு குறிப்பிட்ட மாதிரி வடிவத்தோடு ஒப்பிட்டு ஆய்வு செய்கிறார்கள். இப்போது கொரோனாவுக்கு வருவோம். 

image

சாதாரண சளி, காய்ச்சல் முதல், நிமோனியா காய்ச்சல் வரை உண்டாக்கும் ஒவ்வொரு வைரசும் சீசன் கால கொரோனா வைரஸ்களே. கொரோனா வைரஸ் என்பது மிகப்பெரும் வைரஸ் தொகுப்புகளைக் கொண்டது

தாயம் விளையாடியவருக்கு கொரோனோ : பூந்தமல்லியில் பரபரப்பு

வைரஸ் தொற்றின்போது ஏற்படும் நோய் எதிர்ப்புச் சக்தி பற்றி ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விதமாகப் பிரித்து மனிதர்களிடம் ஆய்வு செய்தனர். முதல் ஆய்வில் 18 பேரைத் தேர்வு செய்தனர். 1977, 78ல் உள்ள ஒரு தொற்று அவர்களுக்குச் செலுத்தப்பட்டது. ஓராண்டுக்குப் பிறகு இவர்களுக்கு மீண்டும் தொற்று உண்டாக்கியபோது அவர்களில் 6 பேர் பாதிக்கப்படவில்லை. 12 பேருக்குப் பாதிப்பு குறைந்த அளவிலிருந்தது.

‘எடுத்தேன் பாரு ஓட்டம்.. சிதறிய கூட்டம்..’ – சேலத்திலும் ட்ரோன் காமெடி..!

 

1990ல் 15 பேரிடம் கொரோனா வைரசை செலுத்திச் சோதிக்கப்பட்டது. 10 பேர் பாதிக்கப்பட்டனர். ஒரு ஆண்டு கழித்து மீண்டும் அவர்களுக்குத் தொற்று உண்டாக்கப்பட்டபோது, குறைந்த அளவு பாதிப்புக்குள்ளானார்கள். இவர்களுக்கு முதல் முறை நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருந்தது தெரியவந்தது.

image

இந்த ஆய்வு முடிவுகளை மற்ற தொற்றுகளுடன் பொருத்திப்பார்க்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சார்சும், மெர்சும் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவை. சார்ஸ் 2002-2003 லும், மெர்ஸ் 2012லும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்கள். இந்த வைரஸ்களை கொண்டு இதுபோன்ற நோய் எதிர்ப்புச் சக்தி குறித்த ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால், முந்தைய ஆய்வு மாதிரிகளை ஒப்பிடும்போது, மனிதர்களின் ரத்தத்தில் தொற்று உருவாகும் போது ஏற்படும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தபட்சம் சில காலங்கள் நீடிக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். சார்சுக்கு 2 ஆண்டுகள், மெர்சுக்கு 3 ஆண்டுகள் வரை நோய் எதிர்ப்புச் சக்தி நீடிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்

image

இதேபோலவே கோவிட்19 பாதிப்புக்கும் பொருத்திப் பார்க்கலாம் என்று கூறும் விஞ்ஞானிகள், கொரோனா பாதிப்பு மூலம் உண்டாகும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தபட்சம் ஓராண்டு வரை நீடிக்கலாம் என்கிறார்கள். நோய் எதிர்ப்புச் சக்தி தனிமனிதர்களிடம் வலுவாகும் அதேநேரம், ஒரு சமூகமாக ஒரு கூட்டமாக நோய் எதிர்ப்புச் சக்தி பெறும்போது தொற்றுகளின் பாதிப்பு குறையும் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.