பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு கொரோனா அறிகுறிகள் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. பாகிஸ்தானில் ‘பிஎஸ்எல்’ எனப்படும் ‘பாகிஸ்தான் சூப்பர் லீக்’ போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் கொரோனா வைரஸ் வேகம் அதிகரித்ததன் காரணமாக அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னரே பிஎஸ்எல் தொடரும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னர் பிஎஸ்எல் போட்டியிலிருந்து கொரோனா வைரஸ் அறிகுறிகள் காரணமாக விலகி இங்கிலாந்து சென்ற அலெக்ஸின் உடல்நிலை, பிஎஸ்எல் தொடரில் பங்கேற்றவர்களை பீதியடையச் செய்துள்ளது.

image

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் காராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடிய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக, அந்த அணியின் உரிமையாளர் சல்மான் இக்பாலுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினார். அதில் தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளதாகவும், எனவே அணியில் இருக்கும் அனைவரும் பரிசோதனைகள் மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த தகவலை சல்மான் அணியினரிடம் கூற, பிஎஸ்எல் தொடர் விளையாடிய அனைவருமே அதிர்ச்சிக்குள்ளாகினர். இதையடுத்து அலெக்ஸ் மருத்துவர்கள் அறிவுரைப்படி இங்கிலாந்து சென்றுவிட்டார். லண்டனில் உள்ள வீட்டிற்கு சென்ற அவரை, மருத்துவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினர். ஆரம்பத்தில் உடல்நலத்துடன் இருந்த அவருக்கு, தற்போது காய்ச்சல் மற்றும் வறட்டு இருமல் ஏற்பட்டிருக்கிறது. இதனை அவரே சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

image

மருத்துவர்களின் அறிவுரைப்படி தான் தற்போது தனிமையில் இருப்பதாகவும், தற்போது தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்புஇருக்கிறதா ? என்பதை உறுதி செய்யமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு இன்னும் சில நாட்கள் ஆக வேண்டும் என்றும், ஆனால் தன்னுடைய உடல்நிலை குறித்த சரியான முடிவுகள் தெரியவரும் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே அலெக்ஸ்க்கு காய்ச்சல் மற்றும் வறட்டு இருமல் ஏற்பட்ட தகவல் பரவ, அது பிஎஸ்எல் போட்டியில் பங்கேற்றவர்களை மேலும் பீதியில் தள்ளியுள்ளது.

சாமானியர்களுக்கு உதவுமா ஆர்பிஐ அறிவிப்புகள்?: என்ன சொல்கிறார் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.