என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டிவிடுகிறது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வறுமையில் வாடும் பல ஏழைகள் உணவுக்கே வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர். மத்திய அரசும் மாநில அரசுகளும், அவர்களுக்காக நிவாரணங்களை அறிவித்து வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tamil Nadu Government allocates Rs 3,280 crore for Corona Relief ...

 செவிலியரை செருப்பால் அடிக்க முயன்ற தொழிலதிபர்? வழக்குப்பதிவு செய்ய மறுக்கும் காவல்துறை?

ஆனால்,  ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் அமைப்பினர் நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு அரசு தடை விதித்துள்ளது.

இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “அண்டை மாநிலங்கள் சில COVID19உடன் போராட தனியார், இளைஞர், ஓய்வு பெற்ற மருத்துவர் எனப் பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள்.This is no time for commision or omission.People are watching” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், “மற்ற மாநில முதல்வர்கள் ஊரடங்கு உத்தரவு குறித்து தன்னாட்சி முடிவு எடுக்கையில் என் மதிப்பிற்குரிய முதல்வரே, நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? உங்கள் எஜமானரின் குரலுக்காகவா?

எனது குரல் மக்களிடமிருந்து வந்தது. உங்கள் நாற்காலியில் அப்படியே உட்கார்ந்து கொண்டிருக்கையில் விழித்திடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.