கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவ மாணவர் ஒருவர் செய்த செயல் இன்று இந்தியர் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.  
 
 மைக்ரோபயாலஜி படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர் ராமகிருஷ்ணா. இந்த மருத்துவ மாணவரின் செயல் இன்றைக்கு இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.  29 வயது நிறைந்த இந்த இளைஞரின் அர்ப்பணிப்பைப் பிரியங்கா காந்தி பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அப்படி என்ன சாதித்தார் இந்த மாணவர்? அதன் முக்கியத்துவம் என்ன? வாருடங்கள் பார்க்கலாம்.
 
நாடே கொரோனாவை எதிர்த்து போராடி வரும் வேளையில், பல தடைகளைத் தாண்டி தக்க தருணத்தில் தனது சேவையை வழங்க முன்வந்துள்ளார் ராமகிருஷ்ணா.
 
image
 
நாடே கொரோனா தொற்றிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில் ராமகிருஷ்ணா அவரது பி.எச்.டி வழிகாட்டியான  துறைத் தலைவர் அமிதா ஜெயினிடமிருந்து ஒருநாள் ஒரு அழைப்பு வந்துள்ளது. இவர் நுண்ணுயிரியல் துறையில் பிஹெச்டி பட்டம் பெற்ற ஆய்வறிஞர். ஆனால் அந்தப் படிப்பை எல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு ராமகிருஷ்ணா தற்போது அவரது பெற்றோருக்கு உதவியாகக் கம்மம் மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.   
 
 
லக்னோவில்  உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பின்  தெலுங்கானாவில் அவரது வீட்டிற்குத் திரும்பிவிட்டார். அதன்பிறகு மருத்துவம் தொடர்பான அனைத்தையும் கைவிட்டுவிட்டார். ஆனால் இந்தக் கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் இவரது உதவி அவரது பிஹெச்டி வழிகாட்டியான ஆசிரியருக்குத் தேவைப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று கிருமிகளின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்ய அவர், ராமகிருஷ்ணாவை அழைத்துள்ளார்.  மார்ச் 21 அன்று இந்த நிகழ்வு நடந்துள்ளது. ஆனால் உடனே கிளம்ப முடியாது. அதுவும் லக்னோ போக வேண்டும். 
 
image
 
ஆனால் தடைகளைத் தகர்த்துத் தக்க நேரத்தில் நாட்டிற்கு உதவ முடிவு செய்த ராமகிருஷ்ணா, அவரது பெற்றோர்களிடம் ஹைதராபாத் சென்று தனது நண்பனுக்குப் படிப்பு சம்பந்தமாக உதவ உள்ளதாக ஒரு பொய்யைச் சொல்லி இருக்கிறார். ஆனால் பெற்றோர் முதலில் மறுத்துள்ளனர். தங்கள் மகனை நகரத்திற்கு 270 கி.மீ பயணம் செய்யக்  கூட  அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் சமாளித்துக் கிளம்பிய ராம், ஹைதராபாத் சென்று பின்னர் 1,500 கி.மீ தூரத்தில் உள்ள லக்னோவுக்குச் சென்று சேர்ந்தார். 
image
 
இது குறித்து ராம்,  “நான் ஆரம்பத்தில் என் பெற்றோரிடம் ஹைதராபாத்தில் படிக்கும் என் கிராமத்தைச் சேர்ந்த எனது நண்பர்களுடன் தங்கியிருப்பேன் என்று சொன்னேன். இப்போது, கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் நான் லக்னோவில் இருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார். ஊரடங்கு  நாளான மார்ச் 22 அன்று லக்னோவிற்கோ அல்லது வேறு எங்கோ போகக்கூடிய அனைத்து சாலைகளும் தடை செய்யப்பட்டிருந்தது.  அந்நாளில் இவர் ஹைதராபாத்தை அடைந்துள்ளார்.  மார்ச் 23 அதிகாலையில், அவர் விமான நிலையத்தில் புறப்பட்டுள்ளார். 
 
இது குறித்து பிரியங்கா காந்தி  அவரது ட்விட்டரில், “இந்தியாவில் இத்தகைய லட்சக்கணக்கான ‘கொரோனா போர் வீரர்கள்’ கௌரவிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.