தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ஃபீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் 969ல் இருந்து 1075 ஆக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.
அத்துடன் தமிழகத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனா வைரஸால் இதுவரை 8 மருத்துவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான செலவை அரசே ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கு ஒட்டகப்பால் வேண்டும் என ட்விட்டர் பதிவு – 20லி பாலை கொண்டுசேர்த்த ரயில்வே!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM